சட்டத்தின் ஆட்சி நடக்கிறதா.. அல்ல சமூக விரோதிகள் ஆட்சி நடக்கிறதா? சீமான் கேள்வி!

Tamil nadu DMK Seeman Social Media
By Swetha Nov 21, 2024 02:56 AM GMT
Report

தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடக்கிறதா இல்லை விரோதிகள் ஆட்சி நடக்குதா என்று சீமான் தெரிவித்துள்ளார்.

சீமான் கேள்வி

இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார், தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினம் அரசுப் பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியை ரமணி பட்டப்பகலில் பள்ளி வளாகத்திலேயே படுகொலை செய்யப்பட்டுள்ள செய்தி பெரும் அதிர்ச்சியையும்,

சட்டத்தின் ஆட்சி நடக்கிறதா.. அல்ல சமூக விரோதிகள் ஆட்சி நடக்கிறதா? சீமான் கேள்வி! | Seeman Slams Tn Cm Stalin And His Government

மிகுந்த மன வேதனையையும் அளிக்கிறது. அந்த செய்தி தந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள் அடுத்த அதிர்ச்சியாக கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் கண்ணன் மீது கொடூரமாக கொலைவெறி தாக்குதல் நடத்தப்படும் காட்சிகள் மனதைக் கொதிக்கச் செய்கிறது.

தமிழ்நாட்டில் கிராம நிர்வாக அலுவலர், வட்டாட்சியர், அரசு மருத்துவர், அரசுப்பள்ளி ஆசிரியர், வழக்கறிஞர் என்று பட்டப்பகலில் அடுத்தடுத்து நிகழும் கொலைவெறி தாக்குதல் யாவும் திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு என்று ஒன்று இருக்கிறதா என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது.

முதல்வர் ஸ்டாலின் இதற்கு வெட்கப்பட வேண்டும் - அண்ணாமலை ஆவேசம்

முதல்வர் ஸ்டாலின் இதற்கு வெட்கப்பட வேண்டும் - அண்ணாமலை ஆவேசம்

விரோதிகள் ஆட்சி

திமுக ஆட்சியில் அரசு ஊழியர்களுக்கே இந்த நிலைமை என்றால், பாமர மக்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்க முடியும்? தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறதா? அல்லது சமூக விரோதிகளின் ஆட்சி நடைபெறுகிறதா? என்ற கேள்வியை ஒவ்வொரு மக்களுக்குள்ளும் எழுப்புகிறது.

சட்டத்தின் ஆட்சி நடக்கிறதா.. அல்ல சமூக விரோதிகள் ஆட்சி நடக்கிறதா? சீமான் கேள்வி! | Seeman Slams Tn Cm Stalin And His Government

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்ப முடியாத கொடுஞ்சூழல் நிலவுகிறது. மக்கள் வாழவே தகுதியற்ற நிலமாக தமிழ்நாட்டினை தி.மு.க. அரசு மெல்ல மெல்ல மாற்றி வருகிறது.

முதலமைச்சாரின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கும் தமிழ்நாட்டின் காவல்துறை முற்றிலும் செயலிழந்த துறையாகிவிட்டது. இந்த கொடூர கொலைகள் நடைபெறும் ஆட்சிதான் எந்த கொம்பனாலும் குறைசொல்ல முடியாத திராவிட மாடல் ஆட்சியா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

ஒவ்வொரு நாளும் அடுத்தடுத்து நிகழும் படுகொலைகள் யாவும் திமுகவை ஆட்சி அதிகாரத்திலிருந்து அகற்றுவதே தமிழ்நாட்டில் மக்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கான ஒரே வழி என்பதையே உணர்த்துகிறது! என்று குறிப்பிடப்பட்டுள்ளது.