ரியல் எஸ்டேட் புரோக்கர்களான ஆட்சியாளர்கள் - சீமான் ஆவேசம்..!
சென்னையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் பேசிய சீமான், ஆளும் திமுக அரசை கடுமையாக சாடி பேசியுள்ளார்.
சீமான் ஆவேசம்
சென்னை வானகரத்தில் நாம் தமிழர் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளிடத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், பல அறிவுரைகளை வழங்கினார்.
அதே நேரத்தில் அவர், ஆளும் ஆட்சியாளர்களை கடுமையாகவும் சாடி விமர்சனம் செய்து பேசினார். அவர் பேசும் போது, இது போர்க்களம். போர்க்களத்தில் என்று கூறி, நாம் எதிர்கொள்ள உள்ள 2024 மற்றும் 2026ஆகிய தேர்தல்கள் தமிழ்ப் பேரினத்திற்கே அவசியமான தேர்தல் என்றார்.
நேர்மறை சிந்தனைகளை வளர்த்துக்கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தி, ஹிந்தி ஒழிக என்பதை விட, தமிழ் வாழ்க என சொல்ல வேண்டும் என்றும் இன்னொருவரின் தாய் மொழியை அழிப்பது என் வேலையல்ல என்று சுட்டிக்காட்டி, என் தாய்மொழியை காப்பதே என் கடமை என்றார்.
புரோக்கர்..
கூட்டணி வைக்காதபோது நம்மை விமர்சித்தவர்கள், இப்போது பாராட்டுகிறார்கள் என்று சுட்டிக்காட்டிய சீமான், அதற்கான நல்லமுடிவு இன்னும் இரண்டு ஆண்டுகளில் தெரியும் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்றது எல்லாம் அதானி, அம்பானி. அம்பானி சொல்கிறார் தொழில் செய்ய ஏற்ற இடம் தமிழ்நாடு என்று குறிப்பிட்ட சீமான், ஏனென்றால், இங்குதானே நிலத்தைப் பறிக்கலாம் என்றும் அதைக் கேட்கும் விவசாயி மீது குண்டாஸ் போடலாம் என்று ஆவேசமாக சீறினார்.
அவனுடைய பொருட்களை எடுத்துக்கொள்ள எட்டுவழிச்சாலை போடலாம் என்று திட்டங்களை குறித்து பேசிய அவர், இவர்கள் முதலமைச்சர், பிரதமர் அல்ல ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் என்றும் இவர்களை வைத்து ஒன்றும் செய்யமுடியாது’’ என ஆவேசமாக பேசினார்.