Wednesday, Jul 9, 2025

ஆளுநர்னா அந்த வேலையை மட்டும் பார்க்கணும்; வாய்க்கு வந்ததெல்லாம் பேசக்கூடாது - சீமான் காட்டம்!

R. N. Ravi Seeman
By Sumathi 2 years ago
Report

ஆளுநர் என்றால் ஆளுநர் வேலையை மட்டும் பார்க்க வேண்டும் என சீமான் சாடியுள்ளார்.

சீமான்

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மருது சகோதரர்களின் குருபூஜையையொட்டி மரியாதை செலுத்தினார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

seeman

ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதற்கு எல்லாம் ஆட்சி கலைக்கப்படுமா என்ன? குண்டு வீசியவனுக்கும் இந்த ஆட்சிக்கும் ஏதோ சம்பந்தம் உள்ளதா? ஆளுநர் என்றால் ஆளுநர் வேலையை மட்டும் பார்க்க வேண்டும்.

அம்மாவுக்கு மகனாக ஆறுதல்; என் அரசு அமையும்போது அதை செய்வேன் - அஞ்சலி செலுத்திய சீமான்!

அம்மாவுக்கு மகனாக ஆறுதல்; என் அரசு அமையும்போது அதை செய்வேன் - அஞ்சலி செலுத்திய சீமான்!

நீட் தேர்வு

இதற்கு முன்பு இப்படியெல்லாம் குண்டு வீசினார்களா?; என்னத்தையாவது வாய்க்கு வந்ததை எல்லாம் ஆளுநர் பேசிக் கொண்டு இருக்க கூடாது. தேர்தல் நேரத்தில் எப்போதும் நடத்தும் நாடகத்தை திமுக நடத்துகிறது.

governor r.n. ravi

நீட் தேர்வை கொண்டு வந்தது யார்?; நீட் தேர்வுக்கு ஆதரவாக வாதாடியது நளினி சிதம்பரம், நீட் வேண்டும் என்று கார்த்தி சிதம்பரம் பேசி உள்ளார் எனத் தெரிவித்துள்ளார்.