பாஜக கட்சியிலேயே பெண்களுக்கு இடஒதுக்கீடு இல்ல...!!! சீமான் விளாசல்!!
எல்லாமே வெறும் பேச்சு அனைவர்க்கும் 15 லட்சம் அளிப்பேன், 2 கோடி இளைஞர்களுக்கு வேலை கொடுத்து விட்டேன் என கூறுவார்கள் என விமர்சித்தார்.
திராவிடம் - இந்து உருவாக்கப்பட்டதே
இன்று செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், உதயநிதி நீட் தேர்விற்காக கையெழுத்து வாங்குவது சரி, இன்னும் 2 மாதங்களில் தேர்தல் அறிவிப்பு வந்துவிட்டால் பிரதமர் சக்தி இழந்து விடுவார் அப்போது இவர்கள் கையெழுத்து வாங்கி யாரிடம் அளிப்பார்கள் என்று வினவினார்.
இங்கு மக்களுக்கான அரசியல் இல்லை என கூறி அனைத்துமே தேர்தல் அரசியல் என கூறி, மத்திய மாநில அரசுகள் இரண்டுமே மக்களுக்கானது இல்லை என்றார்.
அதே போல இங்கு இந்து மதமும், திராவிடமும் உருவாக்கப்பட்டது தான் என்ற சீமான், இந்த மாநிலத்தில் மட்டும் திராவிடர்களாக இருக்கிறோம் ஆனால் தண்ணி கேட்டால் அடித்து விரட்டுகிறார்கள் என விமர்சனத்தை முன்வைத்தார்.
செய்தியாளர்கள் கவுதமி குறித்து கேள்வி எழுப்பிய போது, அதற்கு பதிலளித்த சீமான், கட்சிக்குள்ளே இப்படி இருக்கின்றது என கூறி, இது கொடுமை தான் என்றார். மேலும், தங்கள் கட்சி இந்த தேர்தலிலும் தனித்து தான்போட்டி என உறுதிபட தெரிவித்த சீமான், விஜய் குறித்து வினவிய போது, அவர் கட்சி துவங்கும் போது இதே கேள்வியை அவரிடம் கேளுங்கள் என கூறினார்.