ஆளுநர் சொன்னது சரி; திராவிட மாடல் என்பது இத்துபோன மாடல் - சீமான் காட்டம்
திராவிட மாடல் என்பது இத்துப்போன மாடல் என சீமான் சாடியுள்ளார்.
திராவிட மாடல்
அயோத்திதாச பண்டிதர் நினைவு தினத்தை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,
ரெட்டைமலை சீனிவாசன், அயோத்தி தாசபண்டிதருக்கான சிலைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் இருக்கின்றன. தமிழர்களின் வரலாற்றை திட்டமிட்டு அழிப்பதுதான் இந்திய, திராவிட மாடல் ஆட்சி. இதே நிலை தொடராது என்பதை உறுதியாகக் கூறுகிறோம்.
சீமான் சாடல்
முதல்வர் ஸ்டாலினைவிடச் சிறப்பாக ஆட்சி செய்பவர்களெல்லாம் இருக்கிறார்கள். டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் பள்ளிகளை நட்சத்திர விடுதியின் தரத்துக்கு உயர்த்திவிட்டார். கேரளாவில் 30 சதவிகித தனியார்ப் பள்ளி மாணவர்கள், அரசுப் பள்ளியை நோக்கி வந்திருக்கிறார்கள்.
ஆனால் தமிழ்நாட்டின் திராவிட மாடல் என்றால் சமாதி கட்டுவதும், பேனா வைப்பதும், பள்ளிக்கூடங்களை கட்ட பணமில்லை என மக்களிடம் கையேந்துவதும், ஆதிதிராவிடப் பள்ளிகளை பொதுப்பள்ளியாக மாற்றுவதும்தானே..
திராவிட மாடல் காலாவதியாகிவிட்டது என்று ஆளுநர் கூறுவதை ஏற்கிறேன். திராவிட மாடல் என்பது இத்துப்போன / தீய்ந்துபோன மாடல்தான்.
ஒன்றுமே இல்லாத பா.ஜ.க-வை வளர்த்துவிட்டது தி.மு.க-தான். பா.ஜ.க-வின் மெயின் டீம் தி.மு.க-தான் என காட்டம் தெரிவித்துள்ளார்.