முட்டாபய...மேடையில் சட்டென பாய்ந்த தம்பி - சீரியசான சீமான்
பிரச்சாரத்தில் கூட்டத்தின் போது, மேடையில் சீமான் பேசிக்கொண்டிருக்கும் போது, தம்பி ஒருவர் செல்ஃபி எடுக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீமான் பரப்புரை
நாம் தமிழர் கட்சி சீமான் இம்முறையும் கூட்டணி வைக்காமலே தேர்தல் சந்திக்கிறது. 20 பெண் வேட்பாளர்கள், 20 ஆண் வாக்காளர்களை களமிறங்கியுள்ள சீமான், தமிழகம் முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றார்.
சின்னம் மறுப்பு, NIA சோதனை விவகாரம் என பல நெருக்கடிகளுக்கு மத்தியிலும் தேர்தல் அரசியலில் தீவிரம் காட்டும் சீமான், "ஆளும் கட்சிகள் என்னை கண்டு பயப்படுகின்றன" என்றே பிரச்சாரம் செய்து வருகிறார்.
வசைபாடிய சீமான்
நேற்று கிருஷ்ணகிரியில் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் சீமான் கலந்து கொண்டார். கிருஷ்ணகிரி மக்களவை நாம் தமிழர் வேட்பாளராக வீரப்பனின் மகள் வித்யா ராணி வீரப்பன் போட்டியிடுகிறார்.
நேற்று வித்யா வீரப்பனை ஆதரித்து பாட்டுப் பாடி பிரசாரத்தில் ஈடுபட்டார் சீமான். பாடிக்கொண்டிருந்த போதே, மேடையில் ஏறிய இளைஞர் சீமானுடன் செல்ஃபி எடுக்க முயன்றார். இதனால் சற்று நிதானமிழந்த சீமான் மேடையிலேயே "முட்டாபய.. கிறுக்குபய.. அவன் பிரச்சனை அவனுக்கு.." என வசைபாடினார்.
மேடையில் ஏறி தன்னுடன் செல்பி எடுக்க முயன்ற நபரை முட்டாப்**ங்க என்று திட்டிய சீமான் ? pic.twitter.com/DiK5ZCHbi2
— கபிலன் (@_kabilans) April 7, 2024