சின்னமும் இல்ல...காசும் இல்ல!! விரக்தியுடன் பேசிய சீமான்

Naam tamilar kachchi Tamil nadu Seeman Election
By Karthick Mar 21, 2024 10:48 AM GMT
Report

நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் கிடைக்குமா..? என்ற கேள்வி இன்னும் நீடித்து வருகின்றது.

கரும்பு விவசாயி சின்னம்

உச்சநீதிமன்றத்தில் சின்னம் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில், வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி பதிலளிக்குமாறு தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு தேர்தல் ஆணையத்திற்கும், கர்நாடகாவை சேர்ந்த பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கும் உத்தரவிட்டுள்ளது.

seeman-says-we-will-win-with-any-given-symbol

தேர்தல் வரும் ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெறும் நிலையில், சின்னம் நாம் தமிழர் கட்சிக்கு கிடைக்குமா..? என்ற கேள்விகள் எழுந்துள்ளது. இந்நிலையில், இன்று கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை அண்ணா நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார்.

கரும்பு விவசாயி சின்னம் - நாம் தமிழருக்கு உச்ச நீதிமன்றம் சொன்ன குட்நியூஸ்!

கரும்பு விவசாயி சின்னம் - நாம் தமிழருக்கு உச்ச நீதிமன்றம் சொன்ன குட்நியூஸ்!

அப்போது அவரிடம் சின்னம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சீமான் அளித்த பதில் வருமாறு,

நானும் அத தான் கேக்குறேன், ஏதாவது ஒரு சின்னம் கொடுங்களேன். நாம் என்ன சின்னத்தை கேட்கிறோமோ அதனை உடனே வேறொரு கட்சிக்கு கொடுத்துவிடுகிறார்கள்.

சின்னம் இல்ல, காசு இல்ல...

இது ரொம்ப திட்டமிட்டு, நாங்கள் வளரக்கூடாது என ஒழிக்கவேண்டும் என்பதற்காக நடத்தப்படுகிறது. என கட்சிக்கு 10 ஆயிரம் - 20 ஆயிரம் கொடுத்தால் உடனே நோட்டீஸ் அனுப்புறாங்க...ஆனா நீங்க ரைட் பண்ண இடத்திலெல்லாம் காசு வாங்கிருக்கீங்களே..?

seeman-says-we-will-win-with-any-given-symbol

சின்னம் இல்ல, காசு இல்ல...எந்த சின்னம் வேணாலும் கொடுங்க நாங்க ஜெயித்து காட்டுறோம்.20 நாளில் 40 தொகுதியில் வேலை செய்யணும். இங்க மட்டும் ஏன் ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. அடிக்கடி தமிழகம் வரும் பிரதமர் பாதிப்பின் போது ஏன் வரல...

seeman-says-we-will-win-with-any-given-symbol

தமிழன் வாக்கு மட்டும் வேண்டும். இங்க ஒரு 4 கட்டமாக நடத்தலாமே. எல்லாமே அவுங்க வசதிக்காக தானா. இவ்வாறு சீமான் ஆதங்கமாக பேசினார்.