கரும்பு விவசாயி சின்னம் - நாம் தமிழருக்கு உச்ச நீதிமன்றம் சொன்ன குட்நியூஸ்!

Naam tamilar kachchi Tamil nadu Seeman
By Jiyath Mar 17, 2024 12:03 PM GMT
Report

கரும்பு விவசாயி சின்னம் தொடர்பான வழக்கை நாளை காலை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது

கரும்பு விவசாயி சின்னம் 

நாடாளுமன்ற தேர்தலில் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்தது. இதற்கிடையில் அக்கட்சியின் கரும்பு விவசாயி சின்னம் கர்நாடகாவை சேர்ந்த பாரதிய பிரஜா ஐக்கியதா கட்சிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.

கரும்பு விவசாயி சின்னம் - நாம் தமிழருக்கு உச்ச நீதிமன்றம் சொன்ன குட்நியூஸ்! | Sc Accepted Request Of Ntk For Symbol Case

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சி சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. இந்த வழக்கனது முடித்துவைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அக்கட்சியினர் உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.

நாடாளுமன்ற தேர்தல்: இவர்களுக்கு வாக்களியுங்கள் - ஜெயம் ரவி வேண்டுகோள்!

நாடாளுமன்ற தேர்தல்: இவர்களுக்கு வாக்களியுங்கள் - ஜெயம் ரவி வேண்டுகோள்!

உச்ச நீதிமன்றம் ஒப்புதல் 

இது தொடர்பான வழக்கு வரும் 26-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதால், வழக்கின் முக்கியத்துவத்தை கருத்தில்கொண்டு விரைந்து விசாரிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.

கரும்பு விவசாயி சின்னம் - நாம் தமிழருக்கு உச்ச நீதிமன்றம் சொன்ன குட்நியூஸ்! | Sc Accepted Request Of Ntk For Symbol Case

மேலும், இன்று அல்லது நாளைக்குள் அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று அக்கட்சியின் வழக்கறிஞர் நவநீத் துகர் கோரிக்கை கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில் கரும்பு விவசாயி சின்னம் தொடர்பான வழக்கை நாளை காலை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.