நாடாளுமன்ற தேர்தல்: இவர்களுக்கு வாக்களியுங்கள் - ஜெயம் ரவி வேண்டுகோள்!

Jayam Ravi Tamil Cinema Tamil nadu Election Tamil Actors
By Jiyath Mar 17, 2024 10:29 AM GMT
Report

தேர்தலில் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடிகர் ஜெயம் ரவி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்

தேர்தல் தேதி அறிவிப்பு

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழகத்தில் அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர்கள் தேர்வு என தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

நாடாளுமன்ற தேர்தல்: இவர்களுக்கு வாக்களியுங்கள் - ஜெயம் ரவி வேண்டுகோள்! | Actor Jayam Ravi X Post About Upcoming Election

இதனிடையே நாடாளுமன்றத் தேர்தல் தேதியை இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ் குமார் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அடுத்த மாதம் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்தில் ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.  

தூத்துக்குடியில் பாஜக போடும் பிளான் - கனிமொழிக்கு எதிராக ராதிகா போட்டியா?

தூத்துக்குடியில் பாஜக போடும் பிளான் - கனிமொழிக்கு எதிராக ராதிகா போட்டியா?

ஜெயம் ரவி வேண்டுகோள் 

மேலும், இதையொட்டி தேர்தல் நடைமுறைகள் அனைத்தும் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் தேர்தலில் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடிகர் ஜெயம் ரவி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

நாடாளுமன்ற தேர்தல்: இவர்களுக்கு வாக்களியுங்கள் - ஜெயம் ரவி வேண்டுகோள்! | Actor Jayam Ravi X Post About Upcoming Election

அதில் "வரவிருக்கும் தேர்தலில் வாக்களிக்க நமது நாட்டின் அனைத்து இளம் மற்றும் முதல் முறையாக வாக்களிக்கும் வாக்காளர்களையும் கேட்டு கொள்கிறேன். இந்த தேர்தலில் சரியான வேட்பாளருக்கு வாக்களித்து உங்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளை பயன்படுத்துங்கள்" என்று தெரிவித்துள்ளார்.