பெரியார் மட்டும் போராடவில்லை; விஜய் தமிழ் தலைவர்களையும் போற்ற வேண்டும் - சீமான்

Vijay Periyar E. V. Ramasamy Seeman
By Karthikraja Sep 18, 2024 09:30 AM GMT
Report

பெரியாரை தமிழ் தேசிய தலைவராக ஏற்கவில்லை என சீமான் பேசியுள்ளார்.

சீமான்

புதுக்கோட்டையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், "அருந்ததியர், இஸ்லாமியர்களுக்கு உள் ஒதுக்கீடு கொடுக்க மாநில அரசுக்கு உரிமை இருக்கும் போது சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உரிமை இல்லையா?

seeman press meet

இந்திய, திராவிட கட்சிகளை தவிர்த்து எங்கள் கொள்கைகளை ஏற்று கூட்டணிக்கு வரும் கட்சிகளை ஏற்போம். நான் செய்வது சரி என்று விஜய் வந்தால் ஏற்போம். இல்லையென்றால் அவர் வேலையை பார்த்து அவர் போகட்டும். 

ஆட்சியில் பங்கு கேட்கும் திருமா - சீமான் செய்த அட்வைஸ்

ஆட்சியில் பங்கு கேட்கும் திருமா - சீமான் செய்த அட்வைஸ்

விஜய்

அம்பேத்கர், பெரியார் சிலைக்கு மலை அணிவித்ததை வரவேற்கிறோம். அதே போல் திருவிக, மறைமலை அடிகளார், முத்துராமலிங்க தேவர், ரெட்டமலை சீனிவாசன், இம்மானுவேல் சேகரனார், தீரன் சின்னமலை என அனைத்து தமிழ் அடையாளங்களையும் விஜய் போற்ற வேண்டும். 

seeman press meet

அண்ணல் அம்பேத்கரை அறிவாசானாக வழிகாட்டியாக ஏற்போம். ஆனால் தலைவராக ரெட்டமலை சீனிவாசன், அயோத்திதாச பண்டிதர், எம்.சி.ராஜா என இவர்களைதான் ஏற்போம்.

அமெரிக்க சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் சாதி மதம் கடந்து திராவிடர்களை ஒற்றுமையாக காண்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று ஏன் சொல்லவில்லை . தமிழர்கள் என்று ஏன் சொல்ல வேண்டும்.

பெரியார்

பெரியார் பெயரை பயன்படுத்தாமல் தமிழகத்தில் அரசியல் எடுபடாது என்ற ஆர்.எஸ். பாரதியின் கருத்துக்கு, எங்கள் அரசியல் ஈடுபடுகிறதா இல்லையா? ஜெயலலிதா தினமும் பெரியார் பெரியார் என கூறி வந்தாரா? என பதிலளித்தார்.

பெரியாரை வழிகாட்டியாக ஏற்கிறோம். பெரியாரை தமிழ் தேசியத்திற்கு எதிரியாகவும் பார்க்கவில்லை. தமிழ் தேசிய தலைவராகவும் ஏற்கவில்லை. சமூக நீதிக்கு பெண்ணிய விடுதலைக்கு பெரியாரும் போராடினார் என்பதை ஏற்கிறோம். பெரியார் மட்டுமே போராடினார் என்பதை எதிர்க்கிறோம்.

சாதிய எண்ணம் கொண்டவன் கடவுளை வழிபடவே அறுகதையற்றவன். சாதிய எண்ணம் அரசியலுக்கு வந்தால் நாடு நாசமாகிடும் என சொன்ன முத்துராமலிங்க தேவர். ஆனால் அவர் சாதிய தலைவராக ஆக்கப்பட்டுள்ளார்" என பேசினார்.