நான் ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்தையே தூக்கிடுவேன் - சீமான்

Periyar E. V. Ramasamy R. N. Ravi Seeman Tamil
By Karthikraja Oct 19, 2024 04:30 PM GMT
Report

தென் மாநில பிராமணர்களை குறிக்கவே திராவிடம் என்ற சொல் பயன்பட்டது என சீமான் பேசியுள்ளார்.

சீமான்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். 

seeman

அப்போது பேசிய அவர், ஆளுநர் தமிழ்த்தாய் வாழ்த்தில் திராவிட நல் திருநாடு என்ற வார்த்தையை நீக்கி விட்டார். சரி தமிழ்த்தாய் வாழ்த்தில் ஆரியம் போல் வழக்கொழிந்து என்ற வார்த்தையை நீக்கியது யார் என கேள்வி எழுப்பியுள்ளார். 

2026 தேர்தலில் மைக் சின்னத்தில் போட்டி இல்லை - சீமான் பரபரப்பு

2026 தேர்தலில் மைக் சின்னத்தில் போட்டி இல்லை - சீமான் பரபரப்பு

பிராமணர்களே திராவிடர்கள்

மேலும், திராவிடம்ன்ற வார்த்தையை நீக்கியதற்கே இப்படி கொந்தளிக்கிறீங்களே, 50,000 ஆண்டுகளுக்கு மூத்த என் தாய் மொழி தமிழை கொன்று சமாதி கட்டி வச்சுருக்கீங்களே, எங்களை கொத்து கொத்தா லட்சக்கணக்கா என் இனம் சாகும் போதும், ஆந்திரா கட்டுக்குள் சுட்டு கொல்லப்பட்ட போதும் வராத கோபம் 2 வரியை தூக்கியதற்கு வருகிறது. 

seeman

கால்டுவெல் திராவிடம் என்ற சொல்லை மனு ஸ்ம்ரிதியில் இருந்து எடுத்தேன் என்கிறார். மனு ஸ்ம்ரிதி யாருடையது? வடக்கே இருந்து தென் மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்த பிராமணர்களை குறிக்க பஞ்ச திராவிடர்கள் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டது. கேரளாவில் நடைபெற்ற பஞ்ச திராவிடர்கள் மாநாட்டில் பங்கேற்றது யார்?

தமிழ்த்தாய் வாழ்த்து பெரியார்

தமிழன் என்று சொன்னால் பிராமணனும் உள்ளே வந்து விடுவான் என ஐயா வீரமணி சொல்கிறார். 3% பிராமண பூச்சாண்டி காட்டி 30% திராவிடர் வந்துடீங்க. எங்களுக்கு என்ன இருக்கு. கீழடியில் உள்ள நாகரிகம் எப்படி திராவிட நாகரீகம். அது தமிழர் நாகரிகம். இந்தியா என்ற நாடே அப்போது கிடையாது.

ரெண்டு வரியை நீக்குனதுக்கே இப்படி கொந்தளிக்கிறீங்களே, நான் ஆட்சிக்கு வரும் போது இந்த பாட்டையே தூக்கி விடுவேன் அப்போது என்ன செய்வீர்கள். இது என் நாடு. நான் பிறந்தது வளர்ந்தது தமிழ்நாடு, நாம் தமிழர், நாம் தமிழர்னு பாடு என பாவேந்தர் பாடுகிறார்.

"தமிழ்த்தாயை வாழ்த்தி விட்டால் அவளுக்கு ரெண்டு கொம்பு முளைத்து விடுமா" என திராவிட பெரு மகன் ஐயா பெரியார் பேசியுள்ளார். திராவிடம் என்ற சொல்லே சமஸ்கிருதம்தான்" என பேசினார்.