துரைமுருகனை இடைக்கால முதல்வராக நியமிக்கலாம் - சீமான் பேச்சு

K. Annamalai Seeman Durai Murugan Edappadi K. Palaniswami
By Karthikraja Aug 26, 2024 12:30 PM GMT
Report

இருப்பதிலேயே எடப்பாடி பழனிசாமி தான் புத்திசாலி என சீமான் பேசியுள்ளார்.

சீமான்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்பொழுது அவர் பேசியதாவது, எங்களுக்கு பொருளாதார வலிமை இல்லை. எனவே நமக்கு நாமே வலிமையாக மாற வேண்டியுள்ளது. எல்லா வாக்குச்சாவடியிலும் நாம் தமிழர் கட்சிக்கு முகவர்கள் இல்லை. ஆனால் வாக்குகள் உள்ளது. 

seeman

நான் திருமுருக பெருவிழா என காவடி தூக்கும் போது என்னை எவ்வளவு விமர்சித்தார்கள் என தெரியும். எங்கள் பிள்ளைகள் கந்த சஷ்டி கவசம் படித்தால் கோவில் கருவறைக்குள் சென்று பாட வாய்ப்பிருக்கா? அணைத்து ஜாதியும் அர்ச்சகர் ஆகலாம் என சட்டம் இயற்றினீர்கள். செயல்படுத்த முடிந்ததா? அன்னை தமிழில் அர்ச்சனை இருக்க வேண்டும். 

சாக கிடக்கும் நடிகர்கள் நடிப்பதால் இளைஞர்களுக்கு வாய்ப்பு இல்லையா? ரஜினி பேச்சுக்கு துரை முருகன் பதிலடி

சாக கிடக்கும் நடிகர்கள் நடிப்பதால் இளைஞர்களுக்கு வாய்ப்பு இல்லையா? ரஜினி பேச்சுக்கு துரை முருகன் பதிலடி

டிஎன்பிஎஸ்சி தலைவர்

நீங்கள் என்னை பிச்சைக்காரன் என சொல்ல கூடாது. என்னிடம் காசு இல்லை மக்களிடம் கையேந்துகிறேன். நீங்கள் ஐபிஎஸ் என்றால் ஐபிஎஸ் வேலையை மட்டும் பார்க்க வேண்டும். துரைமுருகனின் செல்போனில் உள்ள உரையாடல்களை எடுத்து வெளியிட போலிஸுக்கு தேவை என்ன? 

seeman

டிஎன்பிஎஸ்சி தலைவராவதற்கு சைலேந்திர பாபுவுக்கு இல்லாத தகுதி பிரபாகருக்கு எப்படி வந்தது? 2 முறை பரிந்துரைத்து ஆளுநர் ஏன் நிராகரித்தார். ஏனென்றால் சைலேந்திர பாபு தமிழர். பிரபாகர் தெலுங்கர். இந்த பிரபாகர் கோயம்புத்தூரில் அண்ணாமலைக்கு ஆதரவாக வேலை செய்தார்.

பாஜகவில் தமிழிசை, நயினார், அண்ணாமலை, கேபி ராமலிங்கம் என இவர்களில் ஒருவரும் இணை அமைச்சருக்கு தகுதி இல்லையா? திரும்பவும் எல்.முருகனுக்கு தான் கொடுக்கணுமா? ஏன் என் இனம் நிராகரிக்கப்படுகிறது" என கேள்வி எழுப்பியுள்ளார்.

துரைமுருகன்

"2026 தேர்தலில் தனித்து போட்டி. இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்கப்படும். 117 தொகுதிகளில் ஆண்கள், 117 தொகுதிகளில் பெண்கள் என வாய்ப்பு வழங்கப்படும்.

ரஜினிகாந்த் துரைமுருகன் பேசியது நகைச்சுவைக்காக தான். துரைமுருகன் அண்ணா காலத்தில் இருந்து கட்சியில் உள்ளவர். வெளிநாடு செல்லும் போது அனுபவம் உள்ள துரைமுருகனை இடைக்கால முதல்வராக நியமித்தால் அந்த மூத்த தலைவனுக்கு ஒரு மரியாதை. அதை கூட உங்கள் மகனுக்குதான் கொடுப்பீர்களா?

அண்ணாமலை நியமன பொறுப்பில் வந்தவர். ஆனால் எடப்பாடி பழனிசாமி தொண்டராக இருந்து படிப்படியாக இந்த பொறுப்புக்கு வந்தவர். அப்படி உள்ளவரை தற்குறி என்றெல்லாம் பேசக் கூடாது. இருப்பதிலேயே அவர் புத்திசாலி தான். தைப்பூசத்திற்கு விடுமுறை அளித்தது எடப்பாடி பழனிசாமி தான்" என பேசியுள்ளார்.