சாக கிடக்கும் நடிகர்கள் நடிப்பதால் இளைஞர்களுக்கு வாய்ப்பு இல்லையா? ரஜினி பேச்சுக்கு துரை முருகன் பதிலடி

Rajinikanth Udhayanidhi Stalin DMK Durai Murugan
By Karthikraja Aug 26, 2024 06:21 AM GMT
Report

நடிகர் ரஜினிகாந்தின் பேச்சுக்கு அமைச்சர் துரைமுருகன் பதிலளித்துள்ளார்.

ரஜினிகாந்த் பேச்சு

சில நாட்களுக்கு முன் தமிழக அமைச்சர் எ.வ.வேலு எழுதிய ‘கலைஞர் எனும் தாய்’ என்னும் நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டு நூலின் முதல் பிரதியை பெற்றார்.   

rajinikanth

அப்பொழுது விழா மேடையில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், எப்போதும் பள்ளி ஆசிரியர்களுக்கு புதிய மாணவர்கள் ஒரு பிரச்சனையாக இருக்க மாட்டார்கள். அவர்களை ஈசியாக சமாளித்து விடுவார்கள். ஆனால் பழைய மாணவர்களை சமாளிப்பது சாதாரண விஷயம் அல்ல. இங்கு ஏகப்பட்ட பழைய மாணவர்கள் உள்ளனர். அவர்கள் சாதாரண பழைய ஸ்டூடன்ஸ் இல்லை. அசாத்தியமானவங்க. 

முதல்வன் படத்தில் ரஜினி நடிக்காததற்கு கருணாநிதி காரணமா? - உண்மையை உடைத்த அமைச்சர்

முதல்வன் படத்தில் ரஜினி நடிக்காததற்கு கருணாநிதி காரணமா? - உண்மையை உடைத்த அமைச்சர்

துரைமுருகன் பதிலடி

எல்லோரும் ரேங்க் வாங்கிவிட்டு வகுப்பறையை விட்டு போகமாட்டேன் என உட்கார்ந்து கொண்டுள்ளனர். அவர்களை சமாளிப்பது எல்லாம் சாதாரணமா? அதுவும் துரைமுருகன் என ஒருவர் உள்ளார். அவர் கலைஞர் கண்ணிலே விரலை விட்டு ஆட்டியவர் என பேசினார். 

duraimurugan

ரஜினிகாந்தின் இந்த பேச்சு குறித்து அமைச்சர் துரைமுருகனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, ‘மூத்த நடிகர்கள் எல்லாம் வயதாகி, பல் விழுந்து, தாடி வளர்த்து, சாகிற நிலையில் கூட நடிப்பதால் இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லையா என ரஜினியின் பேச்சுக்கு பதிலடி கொடுத்தார்.

துரைமுருகனின் பேச்சுக்கு எந்த வருத்தமும் இல்லை அவர் எனது நீண்ட கால நண்பர் எங்கள் நட்பு எப்போதும் தொடரும் என ரஜினிகாந்த் பதிலளித்திருப்பார்.

உதயநிதி ஸ்டாலின்

இந்நிலையில், நேற்று திமுக பொறியாளர் அணி சார்பில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு நிறைவு விஸ்ஜாவில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், "இளைஞர்கள் நம் பக்கம் வர தயாராக இருக்கிறார்கள். நாம் தான் அவர்களுக்கு வழிவிட்டு அரவணைத்து வழிநடத்தி கைப்பிடித்து கூட்டிச் செல்ல வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன். 

udhayanidhi stalin

நேற்றைய நிழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசும்போது எதற்கு அதிக கைத்தட்டல் எழுந்தது என்று உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும். நான் அதை சொன்னால் மனதில் வைத்துக் கொண்டு பேசிகிறார் என்று நினைத்துக் கொள்வீர்கள்" என ரஜினியின் கருத்தை ஆதரிப்பது போல் பேசினார்.

திமுகவில் சீனியர்கள் ஆதிக்கம் இருப்பதை மறைமுகமாக சுட்டிக்காட்டி பேசிய ரஜினியின் பேச்சை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆதரிப்பது போல் பேசியது திமுகவில் உள்ள சீனியர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.