நான் பிரபாகரனை சந்திக்கவே இல்லை; நாங்கள் பாஜகவின் பி டீம் - சீமான் பேச்சு
கருணாநிதி பெரியாரை விமர்சித்து பேசியதில் துளி கூட நாங்கள் பேசவில்லை என சீமான் கூறியுள்ளார்.
சீமான்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய அவர், "நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்தவர்களுக்கு வாழ்த்துகள். திமுகவையும் சேர்த்து நாங்கள் தான் வளர்க்கிறோம். கருணாநிதி பெரியாரை விமர்சித்து பேசியதில், நாங்கள் துளி கூட பேசவில்லை.
பெரியார் திருமணம்
திராவிடர் கழகத்திலிருந்து திமுக பிறந்ததற்கான காரணம் என்ன? அவரே கூறியிருக்கிறார். பெரியார் எங்க ஊரு வேலூருக்கு வந்தார். மணியமையை கூட்டிக்கொண்டு போனார், மணியம்மையை திருமணம் செய்தார். அதிலிருந்து அண்ணா வெளியே சென்றார். மணியம்மை மற்றும் பெரியாரின் திருமணத்தில் பிறந்ததுதான் திமுக என்று கூறினார்.
பிரபாகரனுக்கு ரத்த உறவு கிடையாது. இலட்சிய உறவு தான். இலட்சிய உறவு என பார்த்தால் இந்த மண்ணில் முதலில் போராடி செத்தவன் தான். அவரின் இலட்சியத்திற்காக நிற்கிற நாங்கள் எல்லாரும் தான் அவரின் உறவு. பிரபாகரனின் அண்ணன் மகன் கார்த்திக் மனோகரன் கேட்கும் கேள்விகளுக்கு நான் பதில் சொல்ல வேண்டியது இல்லை, உலகெங்கும் உள்ள என் சொந்தங்கள் பதில் சொல்லிவிடுவார்கள்.
பிரபாகரனை சந்திக்கவில்லை
நான் பிரபாகரனையே சந்திக்கவில்லை என்கிறார் ஒருவர். ஒருவர் நான் பத்து நிமிடம் சந்தித்தேன் என்கிறார். ஒருவர் 8 நிமிடம் சந்தித்தேன் என்கிறார். இன்னொருவர் அவருடன் நான் எடுத்துக்கொண்ட புகைப்படமே பொய் என்கிறார். நான் எங்கள் அண்ணன் பிரபாகரனையே சந்திக்கவில்லை என்று கூறுகிறேன். நீங்கள் எதை நம்புகிறீர்கள்.
அந்த போட்டோ உண்மையா பொய்யா என மற்றவர்களுக்கு நிரூபிக்க வேண்டிய தேவையும் இல்லை அவசியமும் இல்லை. அந்த போட்டோவில் இருப்பது நானே இல்லை சந்திக்கவே இல்லை என்று வைத்துக் கொள்ளுங்கள்.
பாஜகவின் பி டீம்
திமுக பாஜகவின் ஏ டீம் ஆக உள்ளது. எனவே நாங்கள் பாஜகவின் பி டீம் ஆக உள்ளோம். பெரியார் என்னென்ன பேசினார் என்பதை பேச வேண்டும், பெண்களுக்கு தாலி அவமான சின்னம், அதை அறுத்தெறிய சொன்னார். நாங்கள் அருத்தெறிந்தோம். கர்பப்பை ஒரு அடிமை சின்னம், நீ பிள்ளை பிறக்கும் இயந்திரம் இல்லை, அதை அறுத்தெறிய வேண்டும்.
கடவுளை கற்பித்தவன் காட்டுமிராண்டி, வணங்குகிறவன் அயோக்கியன், தமிழ் சனியனை விட்டொழியுங்கள் அது காட்டுமிராண்டி மொழி, தமிழ் பேசுகிறவன் முட்டாள். இதையெல்லாம் பெரியார் பெருமையாக பேசுகிறார் என்பதை பேச வேண்டும். துணிவு மிக்க ஆண் மக்கள், பெரியாரின் தொண்டர்கள் இதை பேசி ஒட்டு கேக்க வேண்டும்.
சீமான் பெரியாரை திட்டி விட்டார். அதனால் அவருக்கு ஓட்டு போடாதீர்கள் என அங்கு வந்து சொல்ல வேண்டும். பெரியாரை எதிர்த்து தானே கட்சியை ஆரம்பித்தீர்கள். ஆரிய ராஜாஜியின் துணை இல்லாமலா திமுக அரியணையில் ஏறியது" என பேசினார்.