மதுரை எய்ம்ஸ்கு அடிக்கல் நாட்டியது அன்புமணி ராமதாஸ் - சீமான் பேச்சு
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அன்புமணி ராமதாஸ் அடிக்கல் நாட்டியதாக சீமான் பேசியுள்ளார்.
சீமான்
சிலம்பு செல்வர் ம.பொ.சி.யின் 29-வது நினைவு நாளை முன்னிட்டு சென்னை தியாகராய நகரில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவரிடம் மது ஒழிப்பு குறித்து கேள்வி எழுப்பிய போது, மதுவை ஒழிக்கும் மாநிலங்களுக்கு கூடுதல் நிதி பகிர்வு என்ற விசிகவின் கோரிக்கை சரியானது. மாநிலங்களின் நிதி தான் மத்திய அரசின் நிதி.
மது ஒழிப்பு
இந்தியாவில் அதிக நிதி வருவாய் கொடுக்கும் மாநிலங்களில் தமிழ்நாடு 2வது இடம். ஆனால் பிரதமரின் ஸ்ரீ பள்ளி திட்டத்தில் கையெழுத்து போட்டால்தான் நிதி தருவோம் என மத்திய அரசு நெருக்கடி தருகிறது.
இந்தியாவின் பிற மாநிலங்கள் மதுவை ஒழித்தால்தான் தமிழ்நாட்டில் மது விலக்கு என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியது ஏற்புடையதல்ல. ஹிந்தி திணிப்பு, GST வரி, நீட் தேர்வு ஆகியவற்றை முதலில் எதிர்த்தது தமிழ்நாடு தான். மத்திய அரசுதான் மதுஒழிப்பு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றால், மாநில அரசின் உரிமை எதற்கு?
மதுரை எய்ம்ஸ்
கருணாநிதிக்கு பேரன், ஸ்டாலினுக்கு மகன் என்பதாலே துணை முதல்வராக தகுதி வந்துவிட்டது என்பதே சனாதனம். செங்கலை கட்டிவிட்டார் என்கிறார்கள். செங்கலை வச்சது யார்? காங்கிரஸ், திமுக பாமக கூட்டணியில் இருக்கும் போது மந்திரி சபையில் இருந்த அன்புமணி ராமதாஸ் வைத்த கல்தான் அது.
அதன் பிறகு 9 ஆண்டுகள் உங்கள் ஆட்சி இருந்தது மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டாமல் என்ன செய்தீர்கள்? இருந்த ஒற்றை செங்கலை தூக்கி சென்று விட்டு ஒற்றை செங்கல் புரட்சி என சொல்கிறீர்கள் கேவலமாக உள்ளது. என பேசி உள்ளார்.