யார் ஜெயிச்சாலும் ஒன்றுதான்; அந்த விவகாரத்தில் நமக்கு எதிரி தான் - சீமான் காட்டம்

Indian National Congress BJP Seeman
By Sumathi May 15, 2023 04:33 AM GMT
Report

கர்நாடகத் தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் ஒன்றுதான் என்று சீமான் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் வெற்றி

சிவகங்கை, அரணையூரில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது தந்தையின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்.

யார் ஜெயிச்சாலும் ஒன்றுதான்; அந்த விவகாரத்தில் நமக்கு எதிரி தான் - சீமான் காட்டம் | Seeman Said Congress Bjp Both Are Same

அதன்பின் பேசிய அவர், ‘மேகதாதுவில் அணை கட்டுவதாக காங்கிரஸ், பாஜக இரு தேசிய கட்சிகளும் கூறியுள்ளதால், கர்நாடகாத் தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் ஒன்றுதான்.

சீமான் கருத்து

கர்நாடகா தேர்தல் முடிவுகள் நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்குமா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, அதனை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும் என்றும், கர்நாடகாவில் இரண்டு கட்சிகள் மாறி மாறி ஆட்சி புரிவதால், கர்நாடக மக்கள் மாற்றத்தை கொடுத்துள்ளனர் என்றார்.

அண்ணாமலை ஆடியோ விவகாரம் குறித்த கேள்விக்கு, அண்ணாமலையை நல்ல ஆடியோ, வீடியோ வெளியீட்டாளராக பார்க்கின்றேன் எனத் தெரிவித்துள்ளார்.