மைக் சின்னம் வேண்டாம் இது தான் வேண்டும் - தேர்தல் ஆணையத்தில் சீமான் கோரிக்கை
வரும் மக்களவை தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னத்தை ஒதுக்கியது தேர்தல் ஆணையம்.
கரும்பு விவசாயி சின்னம்
நாம் தமிழர் கட்சி கடந்த தேர்தலில்களில் பயன்படுத்தி வந்த கரும்பு விவசாயி சின்னம், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி ஒதுக்கப்பட்டுள்ளது.
அக்கட்சி தாங்கள் தமிழகத்தின் 40 தொகுதிகளிலும் போட்டியிட போவதாக தெரிவித்தது, நாம் தமிழர் கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் சூழலில், நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னத்தை ஒதுக்கியது தேர்தல் ஆணையம்.
வேறு சின்னம்
இந்நிலையில், நேற்று 40 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்த சீமான், மக்கள் சின்னத்தை பார்த்து ஓட்டு போடும் பழக்கத்தை கைவிட வேண்டும் என்றும் கேட்டுகொண்டார்.
தற்போது அவர் தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். அதாவது, இந்த தேர்தலில் தங்களுக்கு படகு அல்லது பாய்மர படகு சின்னத்தை ஒதுக்குமாறு அவர் கோரிக்கை வைத்துள்ளார்.