சீமானின் ஆவேச பேச்சிற்கு ஏற்ற சின்னம் - நா.த.க'விற்கு ஒதுக்கப்பட்ட சின்னம் இது தானா..!

Naam tamilar kachchi Tamil nadu Seeman
By Karthick Mar 22, 2024 06:53 AM GMT
Report

நாம் தமிழர் கட்சிக்கு தேர்தல் ஆணையம் சின்னம் ஒதுக்கியுள்ளது.

கரும்பு விவசாயி சின்னம்

உச்சநீதிமன்றத்தில் சின்னம் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில், வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி பதிலளிக்குமாறு தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு தேர்தல் ஆணையத்திற்கும், கர்நாடகாவை சேர்ந்த பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கும் உத்தரவிட்டுள்ளது.

naam-tamilar-to-contest-in-mike-symbol-in-election

தேர்தல் வரும் ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெறும் நிலையில், சின்னம் நாம் தமிழர் கட்சிக்கு கிடைக்குமா..? என்ற சந்தேகம் நிலவி வருகின்றது. இதற்கிடையில் பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி நாம் தமிழரை கூட்டணிக்கு அழைத்திருந்தது.

சின்னம்..?

இந்நிலையில் தான், தற்போது நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதை தமிழக தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாகு செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

சின்னமும் இல்ல...காசும் இல்ல!! விரக்தியுடன் பேசிய சீமான்

சின்னமும் இல்ல...காசும் இல்ல!! விரக்தியுடன் பேசிய சீமான்

சீமானின் ஆவேசமான பேச்சிற்கு ஏற்றார் போலவே, தேர்தல் ஆணையம் இந்த சின்னத்தை ஒதுக்க, அதனை நாம் தமிழர் கட்சியும் ஏற்றுக்கொண்டதாக தகவல் வெளிவந்துள்ளது.

naam-tamilar-to-contest-in-mike-symbol-in-election

நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய சீமான், எந்த சின்னம் ஒதுக்கினாலும் தான் நிச்சயமாக ஜெயித்து காட்டுவேன் என உறுதிபட தெரிவித்திருந்தார் சீமான்.