நான் இருக்கும் வரை அது நடக்கவே நடக்காது; பொறுத்திருந்து பாருங்க - அடித்துசொன்ன சீமான்!
நான் இருக்கும் வரை பாஜக வளராது, வெல்லாது என சீமான் தெரிவித்துள்ளார்.
பாஜக வளராது
விழுப்புரத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “பெண்கள் மற்றும் மாணவர்களுக்கு மாதம் 1,000 ரூபாய் கொடுப்பதால் ஆண்டுக்கு 12,000 கோடி செலவாகிறது.
அந்த பணத்தில் வேலை வாய்ப்பை பெருக்கினால் இளைஞர்களே அவர்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு பணம் கொடுப்பார்களே? நான் இருக்கும் வரை பாஜக வளராது. வெல்லாது. அந்த கட்சியோடு அதிமுக நேரடியாக கூட்டு வைத்துள்ளது.
சீமான் உறுதி
திமுக மறைமுகமாக வைத்துள்ளது அவ்வளவு தான். தேர்தலுக்காக கொள்கைகளை விடுத்து கூட்டணி அமைத்த எத்தனையோ கட்சிகள் காணாமல் போயுள்ளன. அந்த வரிசையில் நாம் தமிழர் கட்சி இடம் பெறாது. திமுகவிற்கு எதிராக இணையும் ஓரணி நாங்கள் அல்ல.
திமுகவை எதிர்க்கும் ஒரே அணி நாம் தமிழர் கட்சி தான். நெருப்பை நெருப்பால் அணைக்க முடியாது. நாங்கள் நீராக இருப்போம். தீமையை வைத்து தீமையை அழிக்க முடியாது. தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் உள்ளது.
பொறுத்திருந்து பாருங்கள். தமிழ்நாட்டில் பெரிய கூட்டணி என்னுடையதுதான்.” எனத் தெரிவித்துள்ளார்.