அவ்வளவு தான் ஸ்டாலினின் கோபமா? சீமான் கேள்வி
கூட்டணி குறித்து தம்பி விஜய் தான் முடிவெடுக்க வேண்டும் என சீமான் பேசியுள்ளார்.
சீமான்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அந்த சந்திப்பில், நடிகர் விஜய் கட்சியின் உடனான கூட்டணி குறித்து கேள்வி கேட்கப்பட்டதற்கு, அதற்கு தம்பி விஜய் தான் முடிவெடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
உங்களுடைய தூண்டுதலின் பேரில் தான் கட்சி நிர்வாகிகள் ஆபாச பதிவு இடுவதாக திருச்சி எஸ்.பி வருண் குமார்கூறியது குறித்து கேட்கப்பட்டதற்கு, என்னையும், என் குடும்பத்தாரையும் பல காலமாக இழிவு படுத்தி எழுதி வருகிறார்கள். நான் அதை கடந்து செல்கிறேன்.
கலைஞர் நாணய வெளியீட்டு விழா
எங்கள் கட்சியினர் பெயரில் பேக் ஐடி மூலம் அவதூறு பரப்புகிறார்கள். எங்கள் கட்சியினருக்கு அது வேலை. அப்படி யாராவது தவறு செய்திருந்தால் உடனடியாக கட்சியை விட்டு நீக்கி உள்ளேன் என தெரிவித்துள்ளார்.
கலைஞர் நாணய வெளியீட்டு விழாவுக்கு கூட்டணியில் உள்ள ராகுல் காந்தி அழைக்கப்படவில்லை என குற்றசாட்டு வைக்கப்படுகிறது என்ற கேள்விக்கு, "திமுகவை யார் எதிர்த்தாலும் சங்கி. a முதல் z வரைக்கும் பாஜகவுக்கு எல்லாம் திமுக தான். இதே ஆளுநரை மாற்ற வேண்டும் இனி ஆளுநர் மாளிகையில் கால் வைக்க மாட்டேன் என பேசினீர்கள். நிதிநிலை அறிக்கையில் மாநிலத்துக்கு போதுமான நிதி ஒதுக்காததற்கு நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்தீர்கள்
தற்போது உங்கள் தந்தைக்கு நூறு ரூபாய் நாணயம் வெளியிட்டதும் ஏன் கை குலுக்கி கட்டி பிடித்து நிற்கிறீர்கள்? இவ்வளவு தான் உங்கள் கோபமா? ராகுல் காந்தியை அழைக்காததற்கு காங்கிரஸ் கட்சி தான் வெட்கப்பட வேண்டும்" என பதிலளித்துள்ளார்.