முருகனுக்கு தங்க வேல் காணிக்கை அளித்த சீமான்; இதுதான் காரணமா - விலை என்ன தெரியுமா?

Thoothukudi Seeman
By Sumathi May 20, 2023 09:59 AM GMT
Report

முருகன் கோவிலுக்கு 2 அடி தங்க வேலை சீமான் காணிக்கை அளித்துள்ளார்.

சீமான் காணிக்கை

திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு தனது மனைவி, மகன் என குடும்பத்தினருடன் நாம் தமிழர் கட்சி ஒருங்கினைப்பாளர் சீமான் சென்றிருந்தார். அங்கு கடற்கரையில் கால் நனைத்து சிறப்பு வழிபாடு நடத்தினார்.

முருகனுக்கு தங்க வேல் காணிக்கை அளித்த சீமான்; இதுதான் காரணமா - விலை என்ன தெரியுமா? | Seeman Presented Gold Vel Tiruchendur Murugan

அதனையடுத்து, தாம் தயார் செய்து கொண்டு வந்திருந்த 2 அடி உயரமுள்ள தங்க வேலை வழங்கி வழிபட்டார். தரிசனத்தை முடித்துக் கொண்டு புறப்பட்ட சீமான், அங்கிருந்த அர்ச்சகர்களுக்கு ஆளுக்கு ரூ.1,000 தட்சணை வழங்கினார்.

2 அடி தங்க வேல்

அவருடன், நாம் தமிழர் கட்சியை சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் மற்றும் இயக்குநர் களஞ்சியம் உள்ளிட்டோர் வந்திருந்தனர். கட்சி தொடங்கப்பட்டு 13 ஆண்டுகள் ஆவதையொட்டி இந்த 'வேல்' காணிக்கையை சீமான் வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் மதிப்பு 25 லட்சம் என தெரியவருகிறது. முன்னதாக, டொயோட்டா பார்ச்சூனர் புது கார் வாங்கிய நிலையில், திருப்போரூர் முருகன் கோயிலில் வைத்து பூஜை செய்தது குறிப்பிடத்தக்கது.