விஜய்க்கு அந்த மனசாவது இருக்கே.. மற்றவர்களுக்கு அது இல்லை - டோனை மாற்றிய சீமான்!
விஜய்க்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது என்ற சீமான் தெரிவித்துள்ளார்.
சீமான்
வங்ககடலில் உருவான “ஃபெஞ்சல்” புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட வட மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வந்தது. நேற்று புயல் கரையை கடக்க தொடங்கிய நிலையில், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் மாலை வரை பலத்த காற்றுடன் கன மழை பெய்தது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை என்றார்.
விஜய்
மண், மலை மணல் என அனைத்தையும் வெட்டி எடுத்தால் இப்படிதான் இயற்கை பேரிடர்கள் ஏற்படும் என்றும் விமர்சித்தார் சீமான். தொடர்ந்து செய்தியாளர்கள், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை டிபி சத்திரம் மக்களை அலுவலகத்திற்கு,
அழைத்து விஜய் நிவாரண உதவிகள் வழங்கியது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த சீமான் விஜய்யால் களத்தில் நிற்க முடியாது என்றார். விஜய் களத்திற்கு சென்றால் பிரச்சனை வரும் என்றும் அவர் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க சென்றால்,
அவரை பார்க்க பெரும் கூட்டம் கூடும் அதனால் பிரச்சனைதான் வரும் என்றார்.பின்னர் அந்த பிரச்சனையையும் சமாளிக்க வேண்டும், விஜய்யால் கூட்டம் கூடி பிரச்சனை வந்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதுவும் செய்ய முடியவில்லை என அதற்கு ஒரு விமர்சனம் வரும் என்றும் சீமான் தெரிவித்தார்.
விஜய்க்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது என்ற சீமான் அதை பாராட்ட வேண்டும் என்றும் மற்றவர்கள் அதைக்கூட செய்யவில்லை என்றும் கூறினார்.