சங்கி என்றால் நண்பன் .. திமுகவைச் சார்ந்தவர்கள் யாரும் சங்கி இல்லையா?சீமான் கேள்வி
சங்கி என்றால் நண்பன் எனப் புராண காலங்களில் கூறப்பட்டுள்ளதாகச் சீமான் தெரிவித்துள்ளார்.
சீமான்
சென்னை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,’ஃபெஞ்சல் புயலால் விழுப்புரம், கடலூர் திருவண்ணாமலை ,கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது.
இதனால் பல்வேறு பகுதிகள் வெள்ள நீரால் மூழ்கியது. குறிப்பாகத் திருவண்ணாமலை மாவட்டத்தில் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஏழு பேர் உயிரிழந்தது மிகத் துயரமான சம்பவம் என்று கூறினார். இனிமேல் பருவமழை என்பது கிடையாது. மழை, கனமழையாகத் தான் இருக்கும்.
இதை நாம் எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்.இல்லை என்றால் புலம்பிக் கொண்டே தான் இருக்க வேண்டும் என்று கூறினார். தொடர்ந்து பேசியவர்,’ என்னைத் தனிப்பட்ட முறையில் சங்கி எனக் கூறியதற்குச் செருப்பைக் கழட்டி அடிப்பேன்' என்று கூறினார்.
சங்கி
மேலும் சங்கி என்றால் நண்பன் எனப் ராமாயணத்தில் புராண காலங்களிலேயே விரிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுகவைச் சார்ந்தவர்கள் யாரும் சங்கி இல்லையா? இவர்கள் பொறுத்தவரைச் சமத்துவம், சமூக நீதி எல்லாம் வெட்டிப் பேச்சு என்று கூறினார்.
தொடர்ந்து, எனது தந்தையை சங்கி எனக் கூறுவது வருத்தமளிக்கிறது என ரஜினியின் மகள் வருத்தம் தெரிவித்தார். நான் அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆதரவாகப் பேசியதாக என்று கூறினார்.