பரந்தூர்'ல விமான நிலையம்..என்ன ஆகும்'னு மழை காட்டிடுச்சுல..! சீமான்
முதலீட்டாளர்கள் மாநாட்டில் பரந்தூர் விமான நிலையத்தின் மாதிரியை தமிழக அரசு வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
முதலீட்டாளர்கள் மாநாடு
சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. நேற்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இந்த நிகழ்ச்சியை துவங்கி வைத்தார்.
இரண்டாவது மற்றும் கடைசி நாளான இன்று, நிறைவு சிறப்புரையாற்றிய தமிழக முதல்வர் பேசும் போது, இந்த மாநாட்டின் மூலமாக 20 வருட வளர்ச்சிக்கான அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளதாக பெருமிதம் தெரிவித்து மொத்தமாக, 6 லட்சத்து 64 ஆயிரத்து 180 கோடி ரூபாய் முதலீடாக ஈர்க்கப்பட்டுள்ளது என்று தகவல் அளித்தார்.
சீமான் பதிவு
இந்நிலையில், இந்த மாநாடு குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், சென்னையில் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், பரந்தூர் வானூர்தி நிலையத்தின் முப்பரிமாண மாதிரியை வைத்த தமிழ்நாடு அரசுக்கு, ஒருவேளை இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால்,
சென்னையில் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், பரந்தூர் வானூர்தி நிலையத்தின் முப்பரிமாண மாதிரியை வைத்த தமிழ்நாடு அரசுக்கு,
— செந்தமிழன் சீமான் (@Seeman4TN) January 8, 2024
ஒருவேளை இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் சென்னையின் முப்பரிமாண மாதிரி எப்படி இருக்கும் என்று தெரிய வேண்டுமென்றால், அதன் நேரலைக் காட்சியினை 2023 ஆண்டு…
சென்னையின் முப்பரிமாண மாதிரி எப்படி இருக்கும் என்று தெரிய வேண்டுமென்றால், அதன் நேரலைக் காட்சியினை 2023 ஆண்டு டிசம்பர் முதல் வாரத்தில் இயற்கை காட்டிவிட்டது என்று நினைவுகூரக் கடமைப்பட்டுள்ளோம்.