20 ஆண்டுகால வளர்ச்சிக்கு அடித்தளம் - முதலீட்டளார்கள் மாநாடு முதல்வர் பெருமிதம்..!

M K Stalin Tamil nadu DMK
By Karthick Jan 08, 2024 12:28 PM GMT
Report

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் மொத்தமாக, 6 லட்சத்து 64 ஆயிரத்து 180 கோடி ரூபாய் முதலீடாக ஈர்க்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவு விழாவில் பெருமிதமாக தெரிவித்தார்.

முதலீட்டாளர்கள் மாநாடு

தமிழகத்தின் தொழில் வளர்ச்சியை பெருக, வேலை வாய்ப்பை உருவாக்கவும், சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது. நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டை முதலமைச்சர் முக ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.

mk-stalin-speech-in-global-investors-meet-2024

இதில், சீனா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இருந்து வர்த்தக மற்றும் தொழில் நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் என 30000 மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொள்ள வருகை தந்தனர். மாநாட்டின் முதல் நாளான நேற்று மட்டும் ரூ.5.5 லட்சம் கோடி அளவுக்கு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.  

மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத் துறையில் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத் துறையில் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

2-ஆம் நாளான இன்று மாநாட்டில் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.இதனையடுத்து, முதலமைச்சர் முக ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். அவர் பேசும் போது, உலகமே வியக்கும் வகையில் முதலீட்டாளர் மாநாடு நடத்தி இதயத்தில் இடம்பிடித்து விட்டார் அமைச்சர் டிஆர்பி ராஜா என புகழாரம் சூட்டி, உலக அரங்கில் முதலீட்டுக்கான சிறந்த மாநிலமாக தமிழ்நாடு உருவாகும் என நம்பிக்கை தெரிவித்தார். 

6 லட்சத்து 64 ஆயிரத்து 180 கோடி 

இந்த மாநாட்டின் மூலம், தமிழ்நாட்டில் அடுத்த 20 ஆண்டுகளுக்கான வளர்ச்சிக்கு அடித்தளமிடப்பட்டுள்ளது என குறிப்பிட்டு, முதலீட்டாளர்கள் மாநாடு தமிழகத்தின் வளர்ச்சியில் பெரும் பாய்ச்சலாக இருக்கும் என்றார். முன் எப்போதும் இல்லாத வகையில் மொத்தமாக, 6 லட்சத்து 64 ஆயிரத்து 180 கோடி ரூபாய் முதலீடாக ஈர்க்கப்பட்டுள்ளது என்றும் முதல்வர் தகவல் அளித்தார்.

27 தொழிற்சாலைகளை திறக்கப்பட்டு, 40 ஆலைகளுக்கு அடிக்கல் நாட்டியுள்ளதாக தெரிவித்த முதல்வர் முக ஸ்டாலின், மாநாட்டில் எதிர்பார்த்ததை விட அதிக முதலீடுகள் கிடைத்துள்ளன என்றும் இதனை இந்தியாவே உற்றுநோக்கும் அவையில் பெருமகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன் என்று பூரிப்புடன் தெரிவித்தார்.

mk-stalin-speech-in-global-investors-meet-2024

இந்த திட்டங்கள் மூலம் நேரடி வேலை வாய்ப்பு என்ற வகையில் 14 லட்சத்து 54 ஆயிரத்து 712 நபர்களுக்கும், மறைமுகமாக 12 லட்சத்து 35 ஆயிரத்து 945 நபர்களுக்கும் என, மொத்தமாக 26 லட்சத்து 90 ஆயிரத்து 657 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என பெருமிதத்துடன் பேசினார்.