மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத் துறையில் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
சுகாதாரத்துறையில் தமிழ்நாடு நம்பர் 1 என இன்று போல் என்றும் வெற்றி நடைபோட்டிட அயராது உழைத்திடுவோம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
உதயநிதி ஸ்டாலின்
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் "மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத் துறையில் இந்திய ஒன்றியத்தின் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது.
குறிப்பாக மகப்பேறியல் துறையில் தமிழ்நாடு பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. மகப்பேறியல் சார்ந்து ரூ.4.60 கோடி மதிப்பீட்டில் சட்டப்பேரவையில் வெளியிடப்பட்ட பல்வேறு அறிவிப்புகளின்படி, நம்முடைய #ChepaukTriplicane தொகுதியில் அமைந்துள்ள அரசு கஸ்தூரிபா காந்தி தாய்-சேய் நல மருத்துவமனையில், மகப்பேறு மருத்துவ அறைகள் உள்ளிட்ட கட்டுமான வசதிகளை இன்று திறந்து வைத்தோம்.
அயராது உழைத்திடுவோம்
மகப்பேறு மருத்துவ சேவைகளுக்கான PICME 3.0 மென்பொருள் - அரசு மருத்துவமனைகளில் மகப்பேறு கால இறப்புகளை தடுக்க உதவிடும் உபகரணங்கள் - அவசர கால மகப்பேறு & குழந்தைகள் பராமரிப்பு மையத்துக்கு தேவையான கருவிகளின் சேவைகளையும் தொடங்கி வைத்தோம்.
மகப்பேறியல் துறையில் சிறப்பு பயிற்சி முடித்த செவிலியர்களுக்கு சான்றிதழ்கள் - சேர்க்கை ஆணைகளை வழங்கினோம். சுகாதாரத்துறையில் தமிழ்நாடு நம்பர் 1 என இன்று போல் என்றும் வெற்றி நடைபோட்டிட அயராது உழைத்திடுவோம்" என்று பதிவிட்டுள்ளார்.