ஆயிரம் சண்டை போட்டாலும் சீமான் மாமா நீங்கதான் என் புருஷன் - அந்தர் பல்டியடுத்த நடிகை!

Vijayalakshmi Naam tamilar kachchi Seeman
By Sumathi Mar 08, 2025 06:00 PM GMT
Report

 சீமானை மறக்கமுடியவில்லை என கூறி நடிகை விஜயலட்சுமி புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பாலியல் புகார்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டதாகவும் அவரால் ஏழுமுறை கருக்கலைப்புக்கு ஆளானதாகவும் நடிகை விஜயலட்சுமி காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார்.

seeman - vijayalakshmi

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் சீமான் விஜயலட்சுமி வழக்கை விசாரிக்க இடைக்கால தடை விதித்துள்ளது. இதனைத்தொடர்ந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள நடிகை விஜயலட்சுமி, சீமான் மாமா நான் பெங்களூரில் ரொம்ப கஷ்டப்படுகிறேன்.

என்ன வேணுமோ அதை ஓபனா கேளுங்க; சீமானை பகைச்சுக்கிட்டேன் - விளாசிய வீரலட்சுமி!

என்ன வேணுமோ அதை ஓபனா கேளுங்க; சீமானை பகைச்சுக்கிட்டேன் - விளாசிய வீரலட்சுமி!

விஜயலட்சுமி வீடியோ

உங்ககிட்ட ஆயிரம் சண்டை போட்டாலும், உங்க மேல எவ்ளோ அன்பு வெச்சிருக்கேன்னு உங்களுக்கு தெரியும். 14 வருஷமாக நீங்க தான்என்னோட கணவருன்னு நினைச்சி வாழ்ந்துட்டு இருக்கேன். என் கடைசி மூச்சு வரைக்கும் நீங்க தான் என் கணவர். நான் உங்க கள்ளக்காதலி இல்ல.

ஆயிரம் சண்டை போட்டாலும் சீமான் மாமா நீங்கதான் என் புருஷன் - அந்தர் பல்டியடுத்த நடிகை! | Seeman My Husband Says Vijayalakshmi Video Viral

நீங்க யாருக்கும் பயப்பட வேண்டியதில்ல. பின்னாடி வந்தவங்களுக்கே இவ்வளவு Possessiveness இருக்குன்னா 2008ல இருந்து நீங்கதான் என் உயிருன்னு நினைச்சி வாழ்ந்துட்டு இருக்குற எனக்கு எப்படி இருக்கும். அது ஒன்னும் தப்பு கிடையாது. எனக்கு எதுக்கு இந்த தண்டனை.

என்னால உங்கள பிரிஞ்சு வாழ முடியல. தயவு செஞ்சு என்கிட்ட பேசுங்க மாமா.. கோர்ட், கேஸ், சண்டை, எதுவும் தேவையில்லை. எனக்கு என் கணவர் சீமான் தான் வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.