இதுதான் என் கடைசி வீடியோ; என்னை விட்டுவிடுங்கள் சீமான் - நடிகை கண்ணீர் மல்க வீடியோ!
இனி சீமான் மீது புகார் கொடுக்க மாட்டேன் என நடிகை வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பாலியல் புகார்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி கடந்த 2011 ஆம் ஆண்டு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் அடிப்படையில் போலீஸார் சீமான் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் சீமான் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிமன்றம், ந்த வழக்கை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது.
நடிகை வீடியோ
விஜயலட்சுமி புகாரை திரும்பப் பெற்றாலும்கூட பாலியல் துன்புறுத்தல் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதால், வழக்கை ரத்துசெய்ய முடியாது என உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சீமான் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தும், 2 மாதங்களுக்குள் இந்த விவகாரத்துக்கு பேசி முடிவு காண வேண்டும். இது தொடர்பாக புகார்தாரரும், தமிழ்நாடு அரசும் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
இந்நிலையில் தீர்ப்புக்கு பின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள விஜயலட்சுமி, “என்னை விட்டுவிடுங்கள், இது தான் என் கடைசி வீடியோ, எனக்கு நியாயம் கிடைக்காது. கிடைக்கவும் விடமாட்டார்கள். இதை தாண்டி இனி எந்த வித போராட்டமும் நான் பண்ண மாட்டேன். இதுவரை மக்கள் கொடுத்த ஆதரவுக்கு நன்றி” என்று கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.