விஜய் சேதுபதியின் புதிய படத்தை பாராட்டிய சீமான் - எகிறும் எதிர்பார்ப்பு!

Vijay Sethupathi Seeman
By Vinothini May 16, 2023 11:32 AM GMT
Report

 தற்போது விஜய் சேதுபதி நடித்துள்ள படத்தை பார்த்து சீமான் பாராட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதிய படம்

பிரபல நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்து டாப் நடிகராக உள்ளார்.

seeman-has-praised-vijay-sethupathis-movie

இவர் தொடர்ந்து தோல்வி படங்களாக நடித்து வந்தார், இவருக்கு விடுதலை வெற்றிப் படமாக அமைந்தது. இதையடுத்து அவருக்கு மீண்டும் வெற்றி படம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் அவர் நடிப்பில் சில ஆண்டுகளாக ரிலீஸ் ஆகாமல் முடங்கிக் கிடந்த ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ திரைப்படம் மே 12 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சீமான் பாராட்டு

இதனை தொடர்ந்து, இந்த படம் இயக்குநர் வெங்கட கிருஷ்ணா ரோகநாத் இயக்கத்தில் மேகா ஆகாஷ் ரகுஆதித்யா, நடிகர் விவேக் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

seeman-has-praised-vijay-sethupathis-movie

இந்த படத்தில் விஜய் சேதுபதி இலங்கையில் இருந்து வந்து வாய்ப்புகளை தேடும் இசைக்கலைஞராக நடித்துள்ளார்.

மேலும், இந்த படம் அரசியலை மையமாக வைத்து எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த படத்தை பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களுக்கு படக்குழு திரையிட்டு காட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது.

அந்த வரிசையில் படத்தைப் பார்த்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் படத்தைப் பார்த்து பாராட்டியதாக கூறப்படுகிறது.