சகோதரி மகள் நிச்சயதார்த்த விழாவில் தழுதழுத்து கண்கலங்கிய சீமான்... - நெகிழ்ச்சி சம்பவம்..!

Viral Video Seeman
By Nandhini Feb 05, 2023 12:13 PM GMT
Report

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன் சகோதரி மகள் நிச்சயதார்த்த விழாவில் கலந்து கொண்டு மேடையில் கண்கலங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை வரவழைத்துள்ளனர்.

மேடையில் கண்கலங்கிய சீமான்

சீமான் சகோதரி மகள் கயல்விழி. இவருடைய நிச்சயதார்த்த விழா சிவகங்கையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சீமான், திருமண பந்தத்தில் இணைய இருக்கும் இருவரையும் வாழ்த்தி, ஆசீர்வதித்தார்.

இதனையடுத்து, மேடையில் இருவரையும் வாழ்த்தி பேச தொடங்கியபோது சீமான் திடீரென உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கினார். அப்போது, அருகில் இருந்த சகோதரி அன்பரசியும், உறவினர்களும் சீமானை அரவணைத்து ஆறுதல் கூறினார்கள்.

தற்போது இது குறித்த செய்தி சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மேடை பேச்சுகளில் இளைஞர் கூட்டத்தை தன் வசப்படுத்தக்கூடியவர். அவரது பேச்சைக் கேட்டு அவரை ஆயிரக்கணக்கான இளைஞர்கள் அவரை பின் தொடர்ந்து வருகிறார்கள். கோபமாகவும், ஆக்ரோஷமாகவும் பேசிய சீமான் கண்கலங்கியுள்ளாரே என்று நெகிழ்ந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.  

seeman-crying-and-emotional-moment-viral-video