சின்னம் இல்லாததால் சமரசமா..? சீமான் குடும்பத்தினர் பழனிசாமியுடன் திடீர் சந்திப்பு.?
நாம் தமிழர் கட்சிக்கு இந்த மக்களவை தேர்தலில் கரும்பு விவசாயி சின்னம் கிடைப்பது பெரும் சிக்கலாகி விட்டது.
சின்னம் பிரச்சனை
இதற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும், தனக்கு அநீதி இழைக்கப்பட்டதாகவே நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் வேதனை தெரிவித்துள்ளார்.
சின்னம் இல்லாத பட்சத்தில் மாற்று சின்னத்தில் அக்கட்சி களமிறங்கவும் தயார் என்றும் சீமான் தெரிவித்து வரும் சூழலில், திடீரென அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சீமானின் குடும்ப உறுப்பினர்கள் இருவர் அண்மையில் சந்தித்து பேசியதாக தகவல் வெளிவந்துள்ளது.
இந்த சந்திப்பிற்கான காரணம் வெளிவராத நிலையிலும், தொடர்ந்து அரசியல் விமர்சகர்கள் சிலர், இது கூட்டணிக்காக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை என்று கூறுகின்றனர்.
ஆனால், கூட்டணி பேச்சுவார்த்தை என்றால் கட்சி நிர்வாகிகள் தானே சந்தித்திருக்க வேண்டும் குடும்பத்தினர் ஏன்.? என்றும் மற்றொரு தரப்பு பேச துவங்கி விட்டது.
கூட்டணியா..?
ஆனால், இதில் கவனிக்கத்தக்க விஷயமொன்று உள்ளது. தொடர்ந்து திராவிட கட்சிகளை சரமறிய விமர்சித்து வரும் சீமான், சில சந்தர்ப்பங்களில் அதிமுகவிடம் ஒரு soft corner காட்டுவதாகவே அவரது பேச்சுக்கள் உள்ளது என அரசியல் தெரிந்தவர் பேசுகிறார்கள்.
கூட்டணி இல்லை என்ற போதிலும், திமுக பலமாக இருக்கும் சில தொகுதிகளில் மட்டும் ஒரு ஆதரவை இருகட்சிகளும் தங்களுக்கு அளித்து கொள்ள நடத்தப்பட்ட பேச்சுவார்தையே இது என்றும் கருத்துக்கள் உலா வர துவங்கிவிட்டன.
அப்படி நடந்துவிட்டால், திராவிட கட்சிகளே வேண்டாம் - கூட்டணி இல்லை - நாம் தமிழர் தான் என பேசும் சீமானின் கொள்கை என்னாவது..?