இந்த இடைத்தேர்தல் வேண்டாம்...அதற்கு பதிலாக இப்படி செய்யலாமே - விளாசிய சீமான்!

Tamil nadu Seeman Election
By Swetha Jul 03, 2024 07:42 AM GMT
Report

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை நடத்தாமல் இதை செய்யலாம் என சீமான் தெரிவித்துள்ளார்.

இப்படி செய்யலாமே..

விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் வருகின்ற 10ம் தேதி நடைபெறவுள்ளது. இம்முறை திமுக, பாமக, நாம் தமிழர் ஆகிய 3 கட்சிகள் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாம் தமிழர் சார்பில் போட்டியிடும் அபிநயாவுக்கு ஆதரவாக சீமான் பிரச்சாரம் செய்தார்.

இந்த இடைத்தேர்தல் வேண்டாம்...அதற்கு பதிலாக இப்படி செய்யலாமே - விளாசிய சீமான்! | Seeman Election Campaign In Vikravandi

அப்போது அவர், எத்தனை வளங்கள் நம் நாட்டில் இருக்கிறது. நீர் வளம், நில வளம், மலை வளம், மனித வளம், கடல் வளம் என கொட்டிக் கிடக்கின்றன. ஆனால், இத்தனை வளங்களை வைத்திருந்தும் நம் நாடு ஏன் இன்னும் இத்தனை ஏழ்மையில், வறுமையில் சிக்கித் தவிக்கிறது? இங்கு ஒரு ஆட்சியை அகற்றி,

இது சட்டசபை இல்லை சாராய சபை...சாகித்ய அகாடமி விருதை விட இது உயர்வா? சீமான் கேள்வி!

இது சட்டசபை இல்லை சாராய சபை...சாகித்ய அகாடமி விருதை விட இது உயர்வா? சீமான் கேள்வி!

விளாசிய சீமான்

இன்னொரு ஆட்சியை கொண்டு வந்தால் மட்டும் என்ன நடந்து விட போகிறது? ஒன்றும் நடக்கப் போவதில்லை. நமக்கு தேவை அரசியல் மாற்றம்தானே ஒழிய ஆட்சி மாற்றம் அல்ல. அதுதான் நமது கோட்பாடு.விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்காக ஆளுங்கட்சியின் அமைச்சர்கள்,

இந்த இடைத்தேர்தல் வேண்டாம்...அதற்கு பதிலாக இப்படி செய்யலாமே - விளாசிய சீமான்! | Seeman Election Campaign In Vikravandi

எம்எல்ஏக்கள் என எல்லோரும் வந்து கோடிக்கோடியாக பணத்தை செலவு செய்கிறார்கள். இதுதான் இங்கு கலாச்சாரம். இது ஒரு கேவலம். கேடுகெட்ட நிலை. இடைத்தேர்தல் என்ற ஒன்றே வேண்டாம். மக்களின் பணத்தை வீணடிக்காதீர்கள். அப்புறம் என்ன செய்யலாம்? விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏவாக

இருந்த அய்யா புகழேந்திக்கு அடுத்த இடத்தில் யார் இருக்கிறார்கள் என்று பாருங்கள். அவரையும் நம்பித்தானே மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். அந்த நபரை இடைக்கால எம்எல்ஏவாக அறிவியுங்கள். பின்னர் சட்டமன்றத் தேர்தல் வரும் போது அந்த தொகுதியிலும் தேர்தல் நடத்துங்கள் என சீமான் கூறினார்.