இது சட்டசபை இல்லை சாராய சபை...சாகித்ய அகாடமி விருதை விட இது உயர்வா? சீமான் கேள்வி!

Tamil nadu Seeman
By Swetha Jul 01, 2024 06:24 AM GMT
Report

சாகித்ய அகாடமி விருதை விட கள்ளச்சாராயம் குடிப்பது உயர்வானதா என சீமான் கேள்விகேட்டுள்ளார்.

சாராய சபை..

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளர் டாக்டர் அபிநயா போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் திருவாமத்தூர் கிராமத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், கடந்த 10 நாட்களாக சட்டசபையில் சாராயத்தை தவிர வேறு எதையும் பேசவில்லை.

இது சட்டசபை இல்லை சாராய சபை...சாகித்ய அகாடமி விருதை விட இது உயர்வா? சீமான் கேள்வி! | Seaman Election Campaign

இது சட்டசபை இல்லை சாராய சபை. வேறு ஒன்றையும் பேசவில்லை. சைதாப்பேட்டையில் 11 வயது சிறுவன் இறந்துவிட்டான். குடிநீரில் கழிவு நீர் கலந்துவிட்டது. தண்ணீர் விஷம் ஆகிவிட்டது என்பதை இதன் மூலம் புரிந்து கொள்ள வேண்டும். சாராயம், குடிநீர் அனைத்தும் இப்பொழுது விஷமாகிவிட்டது.

இதை மாற்ற வேண்டும் பெரியவர் முதல் சிறியவர் வரை ஒரு மாற்றம் வர வேண்டும் என சொல்கின்றனர். அந்த மாற்றத்தை யார் கொண்டு வருவது, தற்காலிக தோல்விக்காக நிரந்தர வெற்றியை இழக்க நாங்கள் தயாராக இல்லை, 7அடி தாண்டுவதற்கு 70 அடி பின்னோக்கி செல்ல வேண்டியது உள்ளது.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் - அதிமுக ஆதரவை நோக்கி நகரும் நா.த.க?

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் - அதிமுக ஆதரவை நோக்கி நகரும் நா.த.க?

சீமான் கேள்வி

மாற்றம் மாற்றம் என சொல்லிக் கொண்டிருந்தால் மாறாது மாற்றம் என்பது ஒரு செயல், நாம் தான் அதை மாற்ற வேண்டும். மாற்றத்தை தொடங்க வேண்டும் என்றால் நம்மில் இருந்து தொடங்க வேண்டும், கள்ளச்சாராயம் குடித்து உயிர் இழந்தவர்களுக்கு 10 லட்சம், பட்டாசு ஆலையில்

இது சட்டசபை இல்லை சாராய சபை...சாகித்ய அகாடமி விருதை விட இது உயர்வா? சீமான் கேள்வி! | Seaman Election Campaign

உயிரிழந்தவர்களுக்கு 3 லட்சம், சாகித்யா அகாடமி விருது பெற்றவர்களுக்க ரூ,25 ஆயிரம். அப்படியென்றால் சாகித்ய அகாடமி விருதை விட கள்ளச்சாராயம் குடிப்பது உயர்வானதா?. இது அநீதி என்பது வெளிப்படையாக தெரிகிறது. தமிழக மக்கள் நீங்கள் நன்றாக சிக்கிக் கொண்டீர்கள்

இதற்கு ஒரே ஒரு வாய்ப்பு மைக் சின்னத்திற்கு வாக்களிப்பது தான், உழைத்து கலைத்த மக்களுக்கு ஒரு பானம் தேவைப்படுகிறது என்கிறார் அமைச்சர் துரைமுருகன். இவர்களை வீட்டுக்கு அனுப்பாமல் நல்ல ஒரு அதிகாரத்தை, ஆட்சியை நம்மால் நல்ல ஒரு அதிகாரத்தை, ஆட்சியை நம்மால் அளிக்க முடியாது. இவ்வாறு பேசினார்.