வேற வேலையில்ல..இவங்க காவி உடை, அவங்க கருப்பு உடை; நாங்க என்ன தெரியும்ல - சீமான்!
ஆளுநர் மளிகை அழைப்பிதழில் திருவள்ளுவர் காவி உடையில் இருந்தது பெரும் சர்ச்சையாகியுள்ளது.
காவி உடை
திருவள்ளுவர் திருநாளை கொண்டாடுவதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், திருவள்ளுவருக்கு காவி நிற உடை அணிவிக்கப்பட்டிருப்பது சர்ச்சையாக உள்ளது. சென்னை மயிலாப்பூரில் திருவள்ளுவர், வைகாசி அனுஷம் தினத்தில் பிறந்ததாக கருதப்படுகிறது.
அந்நாள் அனுஷ்டிக்க படும் நிலையில், இன்று அவரின் திருநாளை கொண்டாடுவதாக ஆளுநர் மாளிகை தரப்பு தெரிவித்துள்ளது.ஆளுநர் மாளிகையின் திருவள்ளுவர் தின அழைப்பிதழில் காவி உடையுடன் திருவள்ளுவர் படம் இருப்பதற்கு தமிழக அரசு வலுவாக கண்டித்து வருகிறது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த பழம்பெரும் புலவர்கள், கவிஞர்கள், ஆன்மீகவாதிகளுக்கு காவி உடை அணிவித்து வருவதை பாஜக வழக்கமாக கொண்டிருக்கிறது. திருவள்ளுவர், ஒளவையார், வள்ளலார், பாரதியார் போன்றோரை காவி உடையுடனும், நெற்றியில் பட்டை மற்றும் திருநீறுடனும் பாஜகவினர் தொடர்ந்து சித்தரித்து வருகின்றனர்.
சீமான்
இந்த காவி உடைக்கு அம்பேத்கர் கூட தப்பிக்கவில்லை.அந்த வகையில், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காட்டமாக கருத்து தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்து சீமான் கூறுகையில், "இவங்களுக்கு வேற வேலை இல்லை.
யாருக்கு வேண்டுமானாலும் இவங்க (பாஜக) காவி உடையை போட்டுருவாங்க. அவங்க (திமுக) கறுப்பு உடையை போட்டுருவாங்க.நாங்க என்ன தெரியுமா போடுவோம்.. ரெண்டையும் கிழிச்சு தூர போடுவோம். அந்த நாள் நெருங்கி விட்டது.
அதிகாரத்தில் இருப்பதால் ஆள் ஆளுக்கு சேட்டை பண்ணிட்டு சுத்திட்டு இருக்கீங்க. திராவிடத்துக்கும், வள்ளுவனுக்கும் என்ன சம்பந்தம் இருக்கு? இந்தியனுக்கும், வள்ளுவனுக்கும் என்ன சம்பந்தம் இருக்கு? எங்க தாத்தா காலத்துலேயும், பாட்டன் காலத்துலேயும் இந்து மதம் இருந்ததா? இதுதான் சேட்டை.