நயன்தாரா'வ தூக்கிட்டு போய்ட தெரியாதா என்ன..? சர்ச்சையை கிளப்பிவிட்ட சீமான்..!!
இன்று செய்தியாளரை சந்தித்த நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நாகாப்பாவை கடத்தியவர்களுக்கு நயன்தாராவை கடத்த தெரியாதா? என பேசியது சர்ச்சைகளை கிளப்பி இருக்கிறது.
சீமான் செய்தியாளர்கள் சந்திப்பு
திருப்பத்தூரில் செய்தியாளர்களை சந்தித்த சீமான் பேசும் போது, சந்தன மரங்கள் தான் இந்த மாவட்டத்தின் பெரிய வருவாயாக இருந்தது என குறிப்பிட்டு, மீண்டும் காட்டு இலாகா அமைச்சகம் அம்மரங்களை வளர்க்க முயற்சியெடுக்க வேண்டும் என கூறினார்.
"எங்க ஆளு" என சந்தன கடத்தல் வீரப்பனை குறிப்பிட்ட சீமான், அவர் இருக்கும் போது மரங்கள் அனைத்தும் பாதுகாப்பாக இருந்ததாக கூறி, அவரை அநியாயமாக சந்தன மரங்களை கடத்தினர், யானை தந்தங்களை வெட்டினர் போன்ற குற்றசாட்டுகளை பரப்பினார்கள் என கூறி, அவர் இருந்த போது காட்டில் மரங்கள் அனைத்தும் பாதுகாப்பாக இருந்ததாக கூறினார்.
நயன்தாராவை கடத்த தெரியாதா?
அவர் இருக்கும் போது காவிரி பிரச்சனை போன்றவை தமிழகத்திற்கு வந்திருக்குமா? என வினவிய சீமான், அவர் மீது அநியாயமாக பழிப்போட்டு, அவரை ஒரு மாயாவி என்றும் திருடன் என்றவர்களிடம் தான் நாட்டில் இருப்பவர்கள் எல்லாம் யார் என வினவியதாக கூறினார்.
அவர் சந்தன மரங்களையும், யானை தந்தங்களை வெட்டினார், சரி என்றால் அதனை யார் வாங்கினார்கள் என தான் கேட்ட கேள்விகளுக்கு இப்போதும் பதிலில்லை என தெரிவித்தார். தமிழர் மரபு தவறாமல் வாழ்ந்த அவர், நாகப்பாவை தூக்கி கொண்ட போன அவருக்கு நயன்தாராவை தூக்கி கொண்டு போக தெரியாதா? என வினவினார்.