ED'ய பாத்த பதுங்கிடுவாங்களா? - கலாய்த்த திமுக எம்.பி ஆ.ராசா!!
திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினரான ஆ.ராசாவின் அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அமலாக்கத்துறை அதிரடி
தமிழ்நாட்டில் அமலாக்கத்துறை தொடர்ந்து அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அமைச்சரவையில் இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.
அதன்பிறகு அமைச்சர் பொன்முடி மீது நடவடிக்கை எடுத்த நிலையில் தான் தற்போது அடுத்த அதிரடியை அமலாக்கத்துறை காட்டியுள்ளது. திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான எம்பி ஆ.ராசாவுக்கு சொந்தமான 15 அசையா சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.
கடந்த 2002 வருட சட்ட விரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக ஆ.ராசா மீது வழக்கு நிலுவையில் உள்ளது. வருமானத்திற்கு அதிகமாக 5 கோடியே 33 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்ததாக கடந்த 2015ஆம் ஆண்டு சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.இந்த வழக்கில், ஆ.ராசா மற்றும் சில நிறுவனங்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
ஏன் பதுங்கிக்குவாங்களா?
இதற்கிடையில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, கோவை கல்லூரி ஒன்றில் நடைபெற்ற பேச்சு போட்டியை துவங்கி வைத்தார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், அமலா க்கத்துறை நடவடிக்கையில் புதியதாக எதுவும் இல்லை. புதியதாக எதுவும் கண்டுபிடிக்கவில்லை என்றார்.
அப்போது செய்தியாளர், அமலாக்கத்துறை நடவடிக்கையை சட்டரீதியாக எதிர்கொள்வீர்களா? என்று வினவிய போது, ஏன் பதுங்கிக்குவாங்களா? என கிண்டலாக பதிலளித்து சென்றார்.