நீங்க சம்பாதிக்க ஒரு தொழில அழிக்க வேண்டாம்!! திமுகவிற்கு அண்ணாமலை எச்சரிக்கை!!

DMK BJP K. Annamalai
By Karthick Oct 13, 2023 08:57 AM GMT
Report

வெள்ளை வகையில் இருந்த தென்னை நார் தொழிலை ஆரஞ்சு வகைக்கு மாற்றி, ஒட்டு மொத்த தென்னை நார் தொழிலையே முடக்கிய திமுக அரசை அண்ணாமலை கண்டித்துள்ளார்.

அண்ணாமலை கண்டனம்

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, வெள்ளை வகையில் இருந்த தென்னை நார் தொழிலை, திமுக அரசின் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் 10/11/2021 அன்று ஆரஞ்சு வகை பிரிவிற்கு மாற்றி அரசாணை பிறப்பித்திருந்தது.அதோடு மட்டுமல்லாமல், தென்னை நார் தொழில்துறைக்கு மட்டுமின்றி, தொழிலாளர், உற்பத்தியாளர் குடியிருப்பு பகுதிகளுக்கும் மின்சாரத்தைத் துண்டித்தது இந்த மக்கள் விரோத திமுக அரசு.

annamalai-slams-dmk-in-coocnut-issue

திமுக அரசின் இந்த நிலைப்பாட்டால், அன்னிய செலாவணி மற்றும் உள்நாட்டு உற்பத்தி, வேலை வாய்ப்பு மற்றும் தென்னை நார் பொருட்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல், மின்கட்டண மானியம் கிடைக்காமலும், அதிகப்படியான மின் கட்டண உயர்வாலும், தென்னை நார் தொழிற்சாலைகள் இயக்கம் பெரிதளவில் பாதிக்கப்பட்டது. உற்பத்தியாளர்கள் மற்றும், தொழிலாளர்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியது.

காவிரி விவகாரம்...எப்போதும் உரிமையை விட்டு கொடுக்க மாட்டோம் - அமைச்சர் உதயநிதி உறுதி!!

காவிரி விவகாரம்...எப்போதும் உரிமையை விட்டு கொடுக்க மாட்டோம் - அமைச்சர் உதயநிதி உறுதி!!


நீங்க சம்பாதிக்க ஒரு தொழில் துறையை வீணாக்கவேண்டாம் 

திமுகவின் இந்த மக்கள் விரோதச் செயல்பாட்டை, கடந்த செப்டம்பர் மாதம் 2 ஆம் தேதி அன்று, தமிழக பாஜக வெளியிட்ட அறிக்கையில் அம்பலப்படுத்தியிருந்தோம். மேலும், தேசிய கயிறு வாரியம், மற்றும் தென்னை நார் தொழில் நிறுவனங்கள், உற்பத்தியாளர்கள் சங்கங்கள், இந்த அரசாணைக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தவுடன், மத்திய அரசிடம் கோரிக்கை வைப்பது போல் நடித்த திமுக அரசு, தற்போது வேறு வழியின்றி,தென்னை நார் தொழிலை, மீண்டும் வெள்ளை வகைக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்துள்ளது.

தங்கள் கட்சியினர் சம்பாதிப்பதற்காக, ஒரு தொழில் துறையையே சீர்குலைத்து, வெள்ளை வகையில் இருந்த தென்னை நார் தொழிலை ஆரஞ்சு வகைக்கு மாற்றி, ஒட்டு மொத்த தென்னை நார் தொழிலையே முடக்கிய திமுக, தற்போது தங்கள் நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கியிருப்பது, மக்கள் போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றி. மீண்டும் இது போல மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்று, திமுக அரசைக் கேட்டுக் கொள்கிறேன் என குறிப்பிட்டு, முந்தைய பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் இதைப் பற்றி விரிவாக பேசியிருக்கும் வீடியோவையும் இணைந்து பகிர்நதுள்ளார்.