இவுகளுக்கு கோயில் கட்டுனதுதான் சனாதனமா? கொடூரமான மனநிலை - குஷ்புவை விளாசிய சீமான்!

Seeman Kushboo
By Sumathi Sep 07, 2023 03:32 AM GMT
Report

தமக்கு தமிழர்கள் கோவில் கட்டியதாக சொல்லிய குஷ்புவுக்கு சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

குஷ்பு கருத்து

சனாதனம் எதிர்க்க வேண்டிய விஷயம் அல்ல; ஒழிக்க வேண்டிய விஷயம் என்று அமைச்சர் உதயநிதி பேசியது பெரும் சர்சையாக வெடித்துள்ளது.

இவுகளுக்கு கோயில் கட்டுனதுதான் சனாதனமா? கொடூரமான மனநிலை - குஷ்புவை விளாசிய சீமான்! | Seeman Condemns Actress Kushboo

இதில், பாஜக உறுப்பினரும், நடிகையுமான குஷ்பு முஸ்லிம் பின்னணியில் பிறந்த எனக்கு தமிழ்நாட்டில் ரசிகர்கள் கோவில் கட்டினார்கள். அதுவும் சனாதனம்தான் எனக் குறிப்பிட்டிருந்தார்.

 சீமான் காட்டம்

இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இதெல்லாம் சனாதனமா? மாட்டு சாணிதான். ஏங்க ஒரு பெண், தனக்கு கோவில் கட்டி வணங்குகிறான் என்பதை ரசித்தால் என்ன மனநிலை? இதுதான் சனாதனம் என்றால் அதை ஏற்கிறீர்களா?

உங்களுக்கு கோவில் கட்டி துதிபாடுகிற வழிபாட்டு முறையை ஏற்கிறீர்களா? இதெல்லாம் தமிழ் மக்களின் அறியாமையையும் அறிவுகெட்ட தனத்தையும் காட்டுது. முட்டாள்தனத்தையும் மூடத்தனத்தையும் காட்டுது. இது எவ்ளோ பெரிய கொடுமை.. இவுகளுக்கு கோயில் கட்டுனதுதான் சனாதனமா? இதை ஏற்கிறீங்களா?

ஒவ்வொருத்தனும் உங்க காலை கழுவி குடிக்கனும்.. உங்க காலில் விழுந்து கும்பிடனும்.. கோவில் கட்டி வணங்கனும். இது எவ்வளவு கொடூரமான மனநிலை. அதை குஷ்பு பேசுவது எவ்வளவு வலியாக இருக்கிறது. அந்த கோவிலை இடிக்காமல் விட்டது எங்களது பெருந்தன்மைதானே. எங்க இருக்குன்னு பாருடா எனத் தெரிவித்துள்ளார்.