அண்ணாமலை உண்மை மட்டுமே பேசுவார் : குஷ்பு பதிலால் பரபரப்பு
ஜெயலலிதாவை ஊழல்வாதி என்று அண்ணாமலை பேசியது குறித்து கருத்து தெரிவித்த நடிகை குஷ்பு அண்ணாமலை எப்போதும் உண்மையைத் தான் பேசுவார் என்று தெரிவித்தார்.
அண்ணாமலை கருத்து
ஜெயலலிதா ஊழல்வாதி என்றும் ஊழலுக்காக தண்டனை பெற்றவர் என்றும் சமீபத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரது பேச்சுக்கு அதிமுகவின் ஜெயக்குமார், அமமுகவின் டிடிவி தினகரன் உள்பட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
குஷ்பு விமர்சனம்
இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக பிரமுகர் குஷ்புவிடம் ஜெயலலிதாவை ஊழல்வாதி என்று அண்ணாமலை பேசியது குறித்து கேட்டபோது அண்ணாமலை எப்போதும் உண்மையைத் தான் பேசுவார் என்றும் சட்டப்படிதான் பேசுவார் என்றும் சட்டப்படி என்ன நடந்ததோ அதைத்தான் பேசுவார் என்றும் தெரிவித்தார். அவரது பதில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.