காலை கழுவுவது பாஜக கோட்பாடு; மகா விஷ்ணு பயங்கரவாதியா? - சீமான் ஆவேசம்

Tamil nadu Seeman
By Karthikraja Sep 07, 2024 08:30 PM GMT
Report

மகா விஷ்ணுவை பயங்கரவாதி போல் கைது செய்வது ஏன் என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

சீமான்

சென்னையில் உள்ள அரசு பள்ளியில் தன்னம்பிக்கை சொற்பொழிவு என்ற பெயரில் மகா விஷ்ணு என்ற நபர் முன்ஜென்மம், மாற்றுத்திறனாளிகள் குறித்து பேசியது சர்ச்சையான நிலையில், அவரை கைது செய்து 5 பிரிவுகளின் கீழ் காவல் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. 

maha vishnu

இந்நிலையில் இன்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், செய்தியாளர்களை சந்தித்து பேசினார். முதன்மை கல்வி அதிகாரியின் ஒப்புதலின் பேரில் தான் வந்ததாக மகா விஷ்ணு கூறியுள்ளார். 

ஆஸ்திரேலியாவில் இருந்து திரும்பிய மகா விஷ்ணு கைது - ரகசிய இடத்தில் வைத்து விசாரணை

ஆஸ்திரேலியாவில் இருந்து திரும்பிய மகா விஷ்ணு கைது - ரகசிய இடத்தில் வைத்து விசாரணை

பா.ஜ.க கோட்பாடு

அப்படியான நிலையில், தலைமையாசிரியரை இட மாற்றம் செய்துள்ளீர்கள். அதிகாரிகளின் மீது என்ன அரசு பள்ளியில் ஆன்மீகம் போதிக்க வேண்டிய அவசியம் என்ன? அதற்கு மடங்கள், ஆசிரமங்கள் உள்ளது. ஆன்மீகம் என்பது எல்லா உயிரினங்களையும் பேரன்புக்கொண்டு நேசிப்பதுதான். 

seeman

ஆசிரியர்களை மனதிற்குள் வைத்து வணங்குவது வேறு. காலை கழுவது என்ன மாதிரியான செயல். இது எல்லாம் எங்கிருந்து வந்தது? இது எல்லாம் ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க.வின் கோட்பாடுகள். இது எப்படி இங்கே உள்ளே வந்தது?

மகாவிஷ்ணு

மகாவிஷ்ணுவை விமானநிலையத்திற்குள் சென்று ஒரு பயங்கரவாதியை போல் கொடுஞ்செயலை செய்தவரை போல் கைது செய்து அதனை செய்தியாக்குவது ஏன்? நீங்கள் வேறு செய்தியை மறைப்பதற்கு இதனை பெரிது செய்கிறீர்கள். அது தான் உண்மை. யாரும் அழைக்காமல் இப்படி வந்து பேச முடியுமா? என பேசியுள்ளார்.

மேலும், ‘பள்ளி மேலாண்மைக் குழு எங்களுக்கும் இதற்கும் தொடர்பில்லை என்று சொல்கிறார்கள்’ என்ற கேள்வியை செய்தியாளர்கள் முன்வைத்தபோது, “அந்த அளவிற்குதான் பள்ளி மேலாண்மையும், கல்வித்துறையும் இருக்கிறதா? தெரியாது என சொல்வதற்கு எதற்கு நிர்வாகம் என கேள்வி எழுப்பியுள்ளார்.