ஆஸ்திரேலியாவில் இருந்து திரும்பிய மகா விஷ்ணு கைது - ரகசிய இடத்தில் வைத்து விசாரணை
ஆஸ்திரேலியாவில் இருந்து திரும்பிய மகா விஷ்ணு கைது செய்யப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
மகா விஷ்ணு
சென்னையில் அசோக் நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு என்ற பெயரில் மகா விஷ்ணு என்ற நபர் உரையாற்றியுள்ளார்.
இதில் பேசிய அவர், கடந்த காலங்களில் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப இந்த ஜென்மம் கடவுளால் படைக்கப்பட்டிருக்கிறது, மந்திரம் சொல்வதன் மூலம் வானில் பறக்க முடியும் என மூட நம்பிக்கைகளை விதைக்கும் பிற்போக்கு கருத்துகளை பேசி இருந்தார்.
அன்பில் மகேஷ்
அப்பொழுது அங்கிருந்த சங்கர் என்ற ஆசிரியர் இந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அந்த நபர் ஆசிரியர் சங்கருடன் வாக்குவாதம் செய்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில் இந்த சம்பவத்திற்கு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் குரல் எழுந்தது.
நீ யார்ரா ம** பாவம் புண்ணியம் சொல்லிக்குடுக்க… பெரிய *** மாதிரி பேசிட்டிருக்கான் 😡 pic.twitter.com/uMqc5WOx5L
— MooknayakDr (@sathisshzdoc) September 5, 2024
மூட நம்பிக்கை பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த ஆசிரியர் சங்கரை அழைத்து தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பாராட்டியதோடு அந்த நபர் சும்மா விடமாட்டேன் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பேசினார்.
இதனையடுத்து அந்த பள்ளி தலைமையாசிரியர் தமிழரசி திருவள்ளூர் மாவட்டம் கோவில்பதாகை அரசு மேல்நிலைப்பள்ளிக்கு இட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கைது?
மகா விஷ்ணுவுக்கு சொந்தமான பரம்பொருள் அறக்கட்டளைக்கு காவல் துறையினர் சென்று விசாரணை நடத்திய நிலையில் அவர் ஆஸ்திரேலியாவில் உள்ளார் என தகவல் வெளியானது.
இது குறித்து ஆஸ்திரேலியாவில் இருந்து வீடியோ வெளியிட்ட, மகா விஷ்ணு ஓடி ஒளியும் வகையில் நான் என்ன தவறான கருத்தைச் சொல்லிவிட்டேன். கடமைகள் இருந்ததால், அசோக் நகர் பள்ளி, சைதாப்பேட்டை பள்ளி நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு, அடுத்த நாளே ஆஸ்திரேலியா வந்துவிட்டேன். இன்று (07.09.2024) மதியம் 1.10 மணியளவில் சென்னை விமான நிலையம் வருகிறேன். என் மீது சுமத்தப்பட்ட குற்றத்திற்கு விளக்கத்தை அளிக்கிறேன் என்று கூறியிருந்தார்.
இதனையடுத்து மதியம் 1 மணி அளவில் விமான நிலையத்தில் ஏராளமான காவலர்கள் குவிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் விமான நிலையத்திலிருந்து காவலர்கள் மகா விஷ்ணுவை ரகசிய இடத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.