என் ஏரியாவுக்கு வந்து அவமானப்படுத்தியிருக்க.. சும்மா விட மாட்டேன் - அன்பில் மகேஷ் ஆவேசம்
மகா விஷ்ணு மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைசர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
அசோக் நகர் அரசு பள்ளி
சென்னையில் அசோக் நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அதேபோல் சைதாப்பேட்டையில் உள்ள அரசுப் பள்ளி ஆகிய இரண்டு பள்ளிகளிலும் ஒரே நேரத்தில் ஆன்மீக சொற்பொழிவு நடத்தப்பட்டுள்ளது.
தன்னம்பிக்கை குறித்த பேச்சு என்ற அடிப்படையில் உரையாற்ற மகாவிஷ்ணு என்பவர் அழைத்துவரப்பட்டுள்ளார். 'தன்னை உணர்ந்த தருணங்கள்' என்ற தலைப்பில் அவர் உரையாற்றியுள்ளார்.
சர்ச்சை பேச்சு
இதில் பேசிய அவர், கடந்த காலங்களில் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப இந்த ஜென்மம் கடவுளால் படைக்கப்பட்டிருக்கிறது, மந்திரம் சொல்வதன் மூலம் வானில் பறக்க முடியும், அந்த மந்திரம் எழுதிய ஓலை சுவடிகளை ஆங்கிலேயர்கள் அழித்து விட்டார்கள் என மூட நம்பிக்கைகளை விதைக்கும் பிற்போக்கு கருத்துகளை பேசியுள்ளார்.
அப்பொழுது அங்கிருந்த சங்கர் என்ற ஆசிரியர் இந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனையடுத்து அந்த நபர் ஆசிரியர் சங்கருடன் வாக்குவாதம் செய்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆன நிலையில் நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
நீ யார்ரா ம** பாவம் புண்ணியம் சொல்லிக்குடுக்க… பெரிய *** மாதிரி பேசிட்டிருக்கான் ? pic.twitter.com/uMqc5WOx5L
— MooknayakDr (@sathisshzdoc) September 5, 2024
இந்த விவகாரம் பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கவனத்துக்கு சென்ற நிலையில், பிற்போக்கு கருத்துக்களளை தட்டி கேட்ட ஆசிரியர் சங்கரை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். அப்பொழுது பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், கண்பார்வை இல்லை என்றாலும் தன் கல்வி அறிவை கொண்டு அவர் கேள்வி கேட்டது பெருமையாக உள்ளது.
பணியிட மாற்றம்
கண்டிப்பாக மகா விஷ்ணு என்பவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். என் ஏரியாவிற்குள் வந்து என் ஆசிரியரை அவமான படுத்தியிருக்கிறீர்கள். அதனால் கண்டிப்பாக சும்மா விட மாட்டேன். இது குறித்து விசாரணை நடத்த பள்ளி கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. என பேசினார்.
தற்போது அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் மற்றும் காவல் துணை ஆணையர் சென்று விசாரணை நடத்திய நிலையில், பள்ளியின் தலைமையாசிரியர் தமிழரசி திருவள்ளூர் மாவட்டம் கோவில்பதாகை அரசு மேல்நிலைப்பள்ளிக்கு இட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.