எப்படி அணையை கட்டுவோம்; வேணும்னா துணைகளை தான் கட்டுவோம் - திமுகவை சீண்டிய சீமான்!
திமுகவை, சீமான் கடுமையாக சாடியுள்ளார்.
சீமான்
ராணிப்பேட்டையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நாடாளுமன்றத் தேர்தலை பொறுத்தவரை எங்களுக்கு ஒரே நிலைப்பாடுதான் தனித்துதான் போட்டியிடுகிறோம்.
இது ஒரு அரசியல் பழிவாங்கல்தான். இந்தியா எனும் கூட்டணியை தொடங்குவதால் இது போன்ற நெருக்கடிகளை தருவதுதான். ஜெகத்ரட்சகன் என்ன இன்று காலையில் பணக்காரர் ஆகிவிட்டாரா?; இதை ரசித்து சிரித்துக் கொள்ள வேண்டியதுதான், ஒன்றும் செய்ய முடியாது.
சிறைக்கைதிகள் விடுதலை
தமிழ்நாட்டில் ஒரு தடுப்பணை கூட இல்லை. நாங்கள் எப்படி அணையை கட்டுவோம்; பல துணைகளை வேண்டுமானால் கட்டுவோம். பத்து ஆண்டுகள் தண்டனை பெற்ற எல்லோரையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற சட்டம் உள்ள நிலையில் இது இஸ்லாமிய சிறைக்கைதிகளுக்கு மட்டும் பாரபட்சம் பார்க்கப்படுகிறது.
இஸ்லாமிய சிறைக்கைதிகள் வெளியே வந்தால் இந்து அமைப்பின் தலைவர்களுக்கு ஆபத்து என திமுக அரசு வாதிடுகிறது. கேட்டால் இஸ்லாமியர்களுக்கு நாங்கள்தான் பாதுகாப்பு என கூறுவதாக காட்டம் தெரிவித்துள்ளார்.