ராமர் என ஒருவர் இருந்தால்...பாஜகவிற்கு இது தான் நடக்கணும் - கோவை சீமான் பரபரப்பு கருத்து
நாம் தமிழர் சீமான் கட்சி வேட்பாளரை ஆதரித்து முழுவதும் தீவிர சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டு வருகின்றார்.
சீமான் பரப்புரை
நாம் தமிழர் கட்சி சீமான் இம்முறையும் கூட்டணி வைக்காமலே தேர்தல் சந்திக்கிறது. 20 பெண் வேட்பாளர்கள், 20 ஆண் வாக்காளர்களை களமிறங்கியுள்ள சீமான், தமிழகம் முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றார்.
சின்னம் மறுப்பு, NIA சோதனை விவகாரம் என பல நெருக்கடிகளுக்கு மத்தியிலும் தேர்தல் அரசியலில் தீவிரம் காட்டும் சீமான், "ஆளும் கட்சிகள் என்னை கண்டு பயப்படுகின்றன" என்றே பிரச்சாரம் செய்து வருகிறார்.
ராமர் என ஒருவர் இருந்தால்...
நேற்று கோவை சரவணப்பட்டி பகுதியில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கட்சி வேட்பாளர் ம.கலாமணி ஜெகநாதனை ஆதரித்து பொதுக்கூட்டத்தில் பேசினார் சீமான். அவர் பேசியது வருமாறு,
தேர்தல் முடிந்தவுடன் பாஜகவிற்கு தேசிய மலரான தாமரையை சின்னமாக ஒதுக்கியது குறித்து வழக்கு தொடரப் போகிறேன்.
பசிக்கிறது என்றால் பாஜக “ஜெய் ஸ்ரீ ராம்” சொல்லுங்கள் என கூறுகிறது.
எனக்கு ஓட்டு போடாவிட்டாலும் சரி, இவர்களுக்கு மட்டும் போட்டு விடாதீர்கள். ராமர் என ஒருவர் இருந்தால் பாஜக இந்த முறை ஒரு இடத்தில் கூட ஜெயிக்காது.