பாஜகவுக்கும் திமுகவுக்கும் என்ன கொள்கை வேறுபாடு உள்ளது? சீமான் கேள்வி
திமுகவுக்கும் பாஜகவுக்கும் என்ன கொள்கை வேறுபாடு உள்ளது என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
சீமான்
சொந்த ஊரில் பணி போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மின் வாரிய கேங்மேன்கள் சென்னை அண்ணா சாலையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போராட்டத்திற்கு தனது ஆதரவை வழங்கினார்.
அப்பொழுது மேடையில் பேசிய சீமான், திமுகவின் 3 வருட ஆட்சியில் 3வது முறையாக மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. எதிர்க்கட்சியாக இருக்கும் போது மின்சார கம்பியை தொட்டால் மட்டும் ஷாக் அடிப்பதில்லை. மின்சார கட்டணத்தை பார்த்தாலே ஷாக் அடிக்கிறது என பேசினார். அந்த ஷாக் இப்போது அதிகம் அடிக்கிறது. முதலில் மின்சாரம் கொடுங்கள் அப்புறம் இலவச மின்சாரம் கொடுக்கலாம்.
பாஜக
அரசுப் பள்ளிகளில் 300 மாணவிகள் படிக்கும் இடத்தில் 2 கழிவறைகள் தான் உள்ளன. ஆனால், பல நூறு கோடியில் சமாதி கட்டப்படுகிறது, கார் பந்தயம் நடத்தப்படுகிறது. போக்குவரத்து ஊழியர்கள், மீனவர்கள், ஆசிரியர்கள், வேளாண் குடிமக்கள் என அனைத்து தரப்பிலும் நாடெங்கும் போராட்டம் நடத்தப்படுகிறது. எல்லோருமே போராடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. துன்பத்தைத் தந்தவருக்கே மீண்டும் அதிகாரத்தைக் கொடுப்பதால் நமக்கு சிந்திக்கும் திறன் உள்ளதா? அரசியல் அறிவு உள்ளதா? என்ற கேள்வி எழுகிறது.
கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களை எத்தனை அமைச்சர்கள் வரிசையாக போய் பார்த்தார்கள். ஆனால் மீனவர்கள் கடலில் சிங்கள ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்ட போது யாரும் சென்று பார்க்கவில்லை. எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத ஆட்சி என்கிறார்கள். ஆனால் குறையை தவிர எதுவுமே இல்லாத ஆட்சி.
பாஜகவுக்கும் திமுகவுக்கும் என்ன கொள்கை வேறுபாடு உள்ளது. ஆட்சியில் இல்லாத போது கோ பேக் மோடி என பேசியுள்ளார்.