அதிமுகவை ஓப்பனாக கூட்டணிக்கு அழைத்த சீமான்..இணைகிறார் விஜய்? ரகசிய பேச்சு!

Vijay Tamil nadu ADMK Seeman
By Swetha Jun 27, 2024 06:56 AM GMT
Report

அதிமுகவை சீமான் கூட்டணிக்கு அழைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுகவுடன் சீமான்

விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அதில் பாமக, நாம் தமிழர், திமுக போட்டியிடுகின்றனர். இங்கே மும்முனை போட்டி நிலவும் நிலையில், அதிமுக ஆதரவை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேட்டுள்ளார்.

அதிமுகவை ஓப்பனாக கூட்டணிக்கு அழைத்த சீமான்..இணைகிறார் விஜய்? ரகசிய பேச்சு! | Seeman Asks Aiadmk Alliance Will Vijay Joins

இது தொடர்பாக சீமான் பேசுகையில், கட்சி ஆரம்பிக்கும் முன்பு ஜெயலலிதாவை ஆதரித்து.. அதிமுகவை ஆதரித்து பிரச்சாரம் செய்தேன். இலங்கை போர் நடந்தது. என் சொந்தங்களை கொன்ற கூட்டத்திற்கு ஆதரவாக இருந்த காங்கிரஸ், திமுகவை எதிர்த்து அதிமுகவிற்கு ஆதரவு அளித்தேன்.

அதன்பின் 2011 தேர்தலில் மீண்டும் அதிமுகவிற்காக பிரச்சாரம் செய்தேன். திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதற்காக பிரச்சாரம் செய்தேன். 2014ல் மீண்டும் அதிமுகவை ஆதரித்து பிரச்சாரம் செய்தேன். எந்த பிரதி பலனும் எதிர்பார்க்கவில்லை. பணம் வாங்கவில்லை. உண்டியல் குலுக்கித்தான் பிரச்சாரம் செய்தேன்.

இப்போது நாங்கள் விக்கிரவாண்டியில் நாங்கள் நிற்கிறோம். அதிமுக ஆதரவை கேட்கிறோம். நம்முடைய பொது எதிரி திமுக. அப்படிப்பட்ட பொது எதிரியை வீழ்த்த வேண்டும் என்று பிரச்சாரம் செய்கிறோம். திமுக என்ற நச்சுமரத்தை வீழ்த்த வேண்டும் . அதற்கு எளிய பிள்ளைகள் எங்களை ஆதரித்து எங்களுடன் நில்லுங்கள். நான் உங்களுக்கு நின்று உள்ளேன்.

எனது அன்புத் தளபதி - த.வெ.க தலைவர் விஜய்க்கு ஈபிஎஸ், சீமான் பிறந்தநாள் வாழ்த்து!

எனது அன்புத் தளபதி - த.வெ.க தலைவர் விஜய்க்கு ஈபிஎஸ், சீமான் பிறந்தநாள் வாழ்த்து!

ரகசிய பேச்சு

இந்த ஒரு தேர்தல் நீங்கள் எங்களுக்கு ஆதரவு கொடுங்கள். அதிமுக இந்த தேர்தலில் நிற்கவில்லை.அப்படி இருக்க அதிமுக எங்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும். அதிமுகவின் ஆதரவு எங்களுக்கு கொடுக்கலாம். எங்களின் வேட்பாளர் அபிநயாவிற்கு ஆதரவு கொடுக்க வேண்டும். 2026ல் என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.

அதிமுகவை ஓப்பனாக கூட்டணிக்கு அழைத்த சீமான்..இணைகிறார் விஜய்? ரகசிய பேச்சு! | Seeman Asks Aiadmk Alliance Will Vijay Joins

அப்போது அரசியல் எப்படி மாறும் என்று பார்க்கலாம். இது சாதாரண இடைத்தேர்தல்தான். இந்த தேர்தலில் எங்களுக்கு ஆதரவு கொடுங்கள், என்று வெளிப்படையாக பேசியுள்ளார். இந்நிலையில், நடிகர் விஜயிடம் கூட்டணி தொடர்பாக அதிமுக ரகசிய பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக அரசியல் வட்டாரத்தில் ஒரு பேச்சு எழுந்துள்ளது.

முக்கியமாக 2026 சட்டசபை தேர்தலை மனதில் வைத்து அதிமுக ரகசியமாக காய்களை நகர்த்தி வருவதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சுக்கள் எழுந்துள்ளன. அதிமுகவில் விஜய்க்கு கொஞ்சம் நெருக்கமாக, அன்பாக இருக்கும் மாஜிக்கள் மூலம் இதற்கான பேச்சுவார்த்தைகள் நடத்தப்படலாம் என்கிறார்கள். 2026க்குள் இது கூட்டணியாக உருவெடுக்குமா என்பதை பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.