ராகுல் தொகுதி என்பதால் ரூ.1 கோடி நிதி.. ஆனால் தூத்துக்குடி? - விளாசிய சீமான்!
வயநாடு அவர்கள் தொகுதி என்பதால் ரூ.1 கோடி நிதி அறிவிக்கிறார்கள் என்று நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.
வயநாடு
இந்தியச் சுதந்திரப் போரில், ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போரிட்டு வெற்றி கண்டவரும், இறுதி மூச்சு வரை தேச விடுதலைக்காகப் போராடியவருமான மாவீரர் தீரன் சின்னமலை அவர்களது 219 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, தீரன் சின்னமலை சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுதினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களை ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் சந்தித்து குறித்து செய்தியாளர் கேள்வியெழுப்பினர்.
ரூ.1 கோடி நிதி
இதற்க்கு பதில் அளித்த அவர்,'' தென்மேற்கு பருவமழை காரணமாக கடந்த 30ம் தேதி மேப்பாடி, சூரல்மலை, முண்டக்கை, வைத்திரி, வெள்ளேரிமலை, பொத்துகலு பகுதியில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்து இதுவரை 344 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 1000க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த கோர சம்பவத்தில் 250 நிலை என்பது என என்று தெரியவில்லை . இந்த துயர வயநாடு நிலச்சரிவு சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் ஓடிவந்து பார்ப்பது மகிழ்ச்சி தான்.
அவர்கள் தொகுதி என்பதால் ரூ.1 கோடி நிதி அறிவிக்கிறார்கள், ஓடி வந்து பார்க்கிறார்கள்; அதே, தூத்துக்குடி பெரும் வெள்ளத்தில் மக்கள் தத்தளித்தபோது ஒருத்தர் கூட வந்து பார்க்காதது ஏன்? என்று கேள்வியெழுப்பியுள்ளார்.