சீமானை சுற்றி வளைத்து கைது செய்த காவல்துறையினர் - என்ன காரணம்?
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கைது செய்யப்பட்டுள்ளார்.
அண்ணா பல்கலைக்கழகம்
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஞானசேகரன் கைது செய்யப்பட்டுள்ள நிலையிலும், பாதிக்கப்பட்ட மாணவியின் தகவல்களுடன் FIR வெளியானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
சீமான் கைது
இந்த விவகாரத்தில் ஆளும் திமுக அரசை கண்டித்து அதிமுக,பாஜக உள்ளிட்ட கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றன. இந்நிலையில் நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று(31.12.2024) சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அழைப்பு விடுத்திருந்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில், காலை முதல் வள்ளுவர் கோட்டத்தில் திரண்ட நாம் தமிழர் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
இதனையடுத்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காரில் இருந்து இறங்கியதும் காவல்துறையினரால் சுற்றி வளைத்து கைது செய்யப்பட்டு வேனில் ஏற்றப்பட்டார். சீமானை கைது செய்ய முற்படும் போது காவல் துறையினருக்கும் கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.