மன்னிப்பெல்லாம் ஏற்க முடியாது; சீமானுக்கு நிச்சயம் தண்டனை - டிஐஜி உறுதி

Naam tamilar kachchi Tamil nadu Seeman
By Sumathi Dec 31, 2024 04:15 AM GMT
Report

சீமான் மன்னிப்பு கேட்டாலும் ஏற்கமுடியாது என டிஐஜி வருண்குமார் தெரிவித்துள்ளார்.

டிஐஜி வருண்குமார் 

திருச்சி முன்னாள் எஸ்.பி.,யும் தற்போதைய டி.ஐ.ஜி.,யுமான வருண்குமார், நாம் தமிழர் கட்சியினர் தனது குடும்பத்தினர் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பேசுவதாக சீமான் மீது வழக்கு தொடர்ந்திருந்தார்.

dig varunkumar - seeman

அவர் அளித்த மனுவில், "சீமான் தன்னையும் தனது குடும்பத்தினரையும் பல்வேறு பேட்டிகள் பொதுக்கூட்டங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் அவதூறாக பேசியும் தனிப்பட்ட விதத்தில் மிரட்டுவதால் தங்கள் குடும்பத்தினர் மன உளைச்சலுக்கு ஆளாகி இள்ளோம்.

எனவே சீமான் தனக்கு இரண்டு கோடி ரூபாய் நஷ்ட ஈடாக தர வேண்டும். அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

மக்கள் வெகுகாலம் வேடிக்கை பார்க்க மாட்டார்கள் - விஜய் ஆவேசம்

மக்கள் வெகுகாலம் வேடிக்கை பார்க்க மாட்டார்கள் - விஜய் ஆவேசம்

அவதூறு வழக்கு

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அருண்குமார், "சீமான் தனியாக சந்தித்து மன்னிப்பு கேட்க தொழிலதிபர் மூலம் தூது விட்டார், ஆனால் நான் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. பொது வெளியில் மன்னிப்பு கேட்க தயாராக இருந்தால், கோர்ட்டில் அதை தெரிவிக்கப்படும்.

மன்னிப்பெல்லாம் ஏற்க முடியாது; சீமானுக்கு நிச்சயம் தண்டனை - டிஐஜி உறுதி | Dig Arun Kumar Firm On Punishing Seeman

இனிமேல் பொதுவெளியில் மன்னிப்பு கேட்டாலும் அதை ஏற்க மாட்டேன். சீமான் மீது கிரிமினல் வழக்கு தொடர்ந்து உள்ளேன். நான் அடுத்த கட்டமாக சிவில் வழக்கு ஒன்றும் தொடர உள்ளேன். சீமானுக்கு நிச்சயம் தண்டனை வாங்கி தருவேன். என்னை மிரட்டி பார்க்க முடியாது. அதற்கான ஆள் நான் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.