விஜயலட்சுமி விவகாரம்.. தட்டிக்கழித்துக்கொண்டே இருந்த சீமான் இன்று மனைவியுடன் ஆஜர்!

Vijayalakshmi Seeman
By Vinothini Sep 18, 2023 07:26 AM GMT
Report

நடிகை விஜயலட்சுமி விவகாரம் தொடர்பாக இன்று சீமான் காவல் நிலையத்தில் ஆஜராகியுள்ளார்.

விஜயலட்சுமி வழக்கு

வழக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி ஏமாற்றியதாகவும், கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ததாகவும் நடிகை விஜயலட்சுமி புகாரளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் கடந்த 10-ம் தேதி வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகுமாறு போலீசார் சம்மன் அனுப்பினர்.

seeman-appeared-in-vijayalakshmi-case

ஆனால் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதால் வழக்கில் ஆஜராக அவகாசம் வழங்கும்படி சீமான் கோரிக்கை விடுத்தார். பின்னர் 12ம் தேதி ஆஜராவார் என்று தெரிவித்தனர், ஆனால் ஆஜராகவில்லை. பிறகு 2ம் முறை அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. பிறகு திடீரென நடிகை விஜயலட்சுமி புகாரை வாபஸ் வாங்கிவிட்டு பெங்களூருக்கு திரும்பி சென்றார்.

சீமான் ஆஜர்

இந்நிலையில், நடிகை விஜயலட்சுமி புகாரை வாபஸ் பெற்றாலும் சீமான் 18-ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று சென்னை வளசரவாக்கம் போலீசார் விளக்கமளித்தனர். நடிகை புகாரை திரும்ப பெற்ற நிலையில் இன்று வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது மனைவியுடன் நேரில் சென்று ஆஜரானார்.

seeman-appeared-in-vijayalakshmi-case

விஜயலட்சுமி அளித்த புகார் மனுவை வாபஸ் பெறப்பட்ட நிலையில் இன்னும் நீதிமன்றத்திற்கு அனுப்பிவைக்கப்படாததால் , சீமான் போலீசாரின் உத்தரவின் பேரில் ஆஜராகியுள்ளார். இதனால் இவரது தொண்டர்கள் பதற்றத்தில் உள்ளனர்.